Indian Railways Rules: இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். ரயில் போக்குவரத்து விலை குறைவானதாகவும், நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வெகு தூரம் பயணம் செய்யும் பயணிகள் தங்களுக்கு வேண்டிய இருக்கையை பெற, ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யத் தொடங்குகின்றனர். பெரும்பாலான மக்கள் ரயிலில் விரும்பும் இருக்கை என்ன வென்றால் லோயர் பெர்த் அல்லது சைட் லோயர் பெர்த் தான். ஆனால் இப்போது சிலருக்கு லோயர் பெர்த் இருக்கைகள் கிடைக்காமல் போகலாம். இதற்கான உத்தரவை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, ரயிலின் லோயர் பெர்த் இருக்கைகள் சில வகை மக்களுக்கு மட்டுமே இனி ஒதுக்கப்படும். ரயிலின் லோயர் பெர்த் தொடர்பான புதிய விதிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | பிப்ரவரி 1 முதல் முக்கிய விதிகளில் மாற்றம்... நோட் பண்ணிக்கோங்க மக்களே..!!
மாற்றுத்திறனாளிகள் அல்லது உடல் ஊனமுற்றவர்களுக்காக இரயிலின் லோயர் பெர்த்தை ரயில்வே ஒதுக்கியுள்ளது. இவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் உத்தரவின்படி, ஸ்லீப்பர் வகுப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு இருக்கைகள், 2 லோயர் பெர்த் 2 மிடில் பெர்த், மூன்றாவது ஏசியில் இரண்டு இருக்கைகள், ஏசி3 எகானமியில் இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கையில் அவரும் அல்லது அவருடன் பயணம் செய்பவர்களும் அமரலாம். அதே நேரத்தில், கரிப் ரத் ரயிலில் 2 கீழ் இருக்கைகளும், 2 மேல் இருக்கைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளுக்கு அவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை
இவை தவிர, மூத்த குடிமக்களுக்கு அதாவது பெரியவர்களுக்கு, 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்திய ரயில்வே லோயர் பெர்த் இருக்கைகளை தருகிறது. ஸ்லீப்பர் வகுப்பில் 6 முதல் 7 லோயர் பெர்த்கள், ஒவ்வொரு மூன்றாவது ஏசி கோச்சில் 4-5 லோயர் பெர்த்கள், ஒவ்வொரு இரண்டாவது ஏசி பெட்டியிலும் 3-4 லோயர் பெர்த்கள் ரயிலில் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் டிக்கெட்களை புக் செய்யும் போது லோயர் பெர்த் விருப்பத்தையும் தேர்ந்தெடுக்காமல் இருந்தாலும் அவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். மறுபுறம், மூத்த குடிமக்களுக்கு அல்லது கர்ப்பிணி பெண்ணுக்கு மேல் இருக்கையில் டிக்கெட் முன்பதிவு கொடுக்கப்பட்டால், ஆன்போர்டு டிக்கெட் சோதனையின் போது TT அவர்களுக்கு லோயர் பெர்த் இருக்கை வழங்குவதற்கான ஏற்பாடு செய்ய முடியும்.
இந்திய ரயில்வே அபராத விதிகள்
இந்திய ரயில்வே பயணிகளுக்கு பல விதிகளை கொண்டு வருகிறது. இந்த விதிகளை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ரயில்வே விதிகளின்படி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அதிகபட்சமாக ரூ.1000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். அபராதம் 250 ரூபாய் வரை இருக்கலாம். அதே போல ஒரு பயணி வேறு ஏதேனும் பெட்டியில் டிக்கெட் எடுத்து பயணம் செய்தால், அதாவது ஒரு பயணி ஸ்லீப்பர் கோச் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு ஏசி கோச்சில் பயணம் செய்கிறார் என்றால் டிக்கெட்டுகளுக்கு இடையேயான வித்தியாச தொகை வசூலிக்கப்படும். இதிலும் TTE மூலம் கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ