இன்றைய பங்குச் சந்தை நிலவரம் என்ன? Profit அளிக்கக்கூடிய Stock Tips!!

செவ்வாய்க்கிழமை அதிக உத்வேகத்துடன் மூடப்பட்ட இந்திய பங்குச் சந்தைகளுக்கு இன்று வெளிநாட்டு சந்தைகளின் அறிகுறிகள் நல்ல விதத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 28, 2020, 08:44 AM IST
  • கொரோனாவின் அதிகரித்து வரும் எண்ணிக்கையால் அமெரிக்க சந்தை அச்சமடைந்துள்ளது.
  • SGX Nifty 50 புள்ளிகள் குறைந்து 11840 க்கு அருகில் உள்ளது.
  • ஆசிய சந்தைகளும் மந்தநிலையுடன் வர்த்தகம் செய்கின்றன.
இன்றைய பங்குச் சந்தை நிலவரம் என்ன? Profit அளிக்கக்கூடிய Stock Tips!! title=

புதுடெல்லி: செவ்வாய்க்கிழமை அதிக உத்வேகத்துடன் மூடப்பட்ட இந்திய பங்குச் சந்தைகளுக்கு (Indian Share Markets) இன்று வெளிநாட்டு சந்தைகளின் அறிகுறிகள் நல்ல விதத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. SGX Nifty 50 புள்ளிகள் குறைந்து 11840 க்கு அருகில் உள்ளது.  அமெரிக்க ஃபூச்சர்ஸ் சந்தைகளைப் பற்றி பேசுகையில், டவ் ஃபியூச்சர்ஸ் 130 புள்ளிகளும், நாஸ்டாக் ஃபூச்சர்ஸ் 45 புள்ளிகளும் குறைந்துள்ளன.

ஆசிய சந்தைகளும் (Asian Markets) மந்தநிலையுடன் வர்த்தகம் செய்கின்றன. ஜப்பானின் நிக்கி 45 புள்ளிகள் குறைந்துள்ளது. ஹாங்காங்கின் சந்தை ஹாங்க் செங் 85 புள்ளிகள் குறைந்துள்ளது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸும் அரை சதவீதம் சரிந்தது.

நேற்று வெளிநாட்டு சந்தைகள் எப்படி இருந்தன

கொரோனாவின் அதிகரித்து வரும் எண்ணிக்கையால் அமெரிக்க சந்தை அச்சமடைந்துள்ளது. அமெரிக்க சந்தைகள் நேற்று மீண்டும் குறைந்த நிலையிலேயே மூடின. டவ் ஜோன்ஸ் 222 புள்ளிகளை இழந்தது. எஸ் & பி 500 கிட்டத்தட்ட ஃப்ளாட்டாக மூடியது.

ஆனால் நாஸ்டாக் 72 புள்ளிகள் அதிகரிப்பைக் காட்டியது. நேற்று ஃபைசரின் முடிவுகள் வந்துவிட்டன, மைக்ரோசாப்டின் வழிகாட்டுதலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. நேற்று, அமெரிக்க சந்தைகளில் ஐடி பங்குகளை பலர் வாங்கினார்கள்.

ஐரோப்பிய சந்தைகளும் தொடர்ந்து சரிந்து வருகின்றன. ஐரோப்பிய சந்தைகள் 1-2% குறைந்துள்ளன. லண்டனின் சந்தை FTSE மற்றும் ஜெர்மனியின் சந்தை DAX தலா ஒரு சதவீதத்தையும், பிரான்ஸ் CAC40 இரண்டு சதவீதத்தையும் இழந்துள்ளன.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும், கொரோனா அதிகரித்து வருவதால் பீதியின் சூழ்நிலை உள்ளது. அதன் விளைவு இரு நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் தெரியும். அமெரிக்காவில் நிவாரணப் பொதியின் விஷயம் இப்போது மெதுவாக குளிர்ந்து வருகிறது. தேர்தல்களுக்குப் பிறகுதான் இது குறித்து விவாதிக்கப்படும் என்று இப்போது நம்பப்படுகிறது. எனவே இது சந்தைக்கு இனி ஒரு காரணியாக இருக்காது.

ALSO READ: Salary cut இனி இல்லை, விரைவில் போனஸ்: ஊழியர்களுக்கு good news அளித்தது இந்த நிறுவனம்!!

கச்சா எண்ணெய் ஏற்ற இறக்கங்கள் தொடர்கின்றன. மற்றொரு புயலை எதிர்பார்த்து இருக்கும் மெக்ஸிகோ வளைகுடாவில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் வர்த்தகம் $ 40 ஆக உள்ளது.

இன்றைய உத்தி

எங்கள் இணை சேனலான ஜீ பிசினஸின் அனில் சிங்வி கூறுகையில், 'அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றன. லாக்டௌனுக்கான சாத்தியம் பொருளாதார மீட்சியை பாதிக்கலாம். அமெரிக்காவில் அதிபர் தேர்தல்களும் உள்ளன. கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலை பயங்கரமானதாக இருக்கும் என்ற அச்சம் உள்ளது. இதனால், அரசாங்கங்கள் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும். இதன் விளைவு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சந்தைகளில் தெளிவாகக் காணப்படுகிறது.

அனில் சிங்வி கருத்துப்படி, "இன்று Nifty-க்கான ஆதரவு வரம்பு 11725-11775 ஆகும். மேல் வரம்பு 11975-12025 ஆக இருக்கும். Bank Nifty-யின் ஆதரவு வரம்பு 24250-24350 ஆகும், இது வாங்கும் வரம்பாக இருக்கும். மேல் வரம்பு 25000-25200 ஆக இருக்கும்.”

இன்றைய வர்த்தகத்திற்கான Tips (தரகர்கள் கருத்து)

Cipla (Cash)

Buy – 771

Stoploss – 749

Target – 810

CDSL

Stoploss – 460

Target – 490

Adani Gas

Stoploss – 194

Target - 205

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News