HMPV வைரஸ்.... சந்தேகங்கள் அனைத்திற்கும் பதில் தரும் குழந்தைகள் நல மருத்துவர்... முழு விபரம்

HMPV வைரஸ்: தில்லி RML மருத்துவமனையின் குழந்தை அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் பினாகி ஆர் தேப்நாத், குழந்தைகளுக்கு HMPV வைரஸின் தாக்கம் குறித்து பெற்றோரின் அனைத்து கவலைகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 7, 2025, 06:11 PM IST
  • HMPV வைரஸ் தொற்றுக்கு ஏதேனும் மருந்து உள்ளதா?
  • சுவாச மண்டத்தை பாதிக்கும் ஆர்என்ஏ வைரஸ்
  • HMPV வைரஸ் தொற்று வராமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
HMPV வைரஸ்....  சந்தேகங்கள் அனைத்திற்கும் பதில் தரும் குழந்தைகள் நல மருத்துவர்... முழு விபரம் title=

HMPV வைரஸ்: பொது மக்கள் மத்தியில் HMPV வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இதற்கான ஆபத்து அதிகம் உள்ளது. முதலில் பெங்களூரு, குஜராத் உள்ளிட்ட இடங்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், சென்னையிலும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழக அரசும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தில்லி RML மருத்துவமனையின் குழந்தை அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் பினாகி ஆர் தேப்நாத், குழந்தைகளுக்கு HMPV வைரஸின் தாக்கம் குறித்து பெற்றோரின் அனைத்து கவலைகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். டாக்டர் பினாகி கூறுகையில், 'முதலில், இது திடீர் பேரழிவு அல்ல, HMPV அதாவது மனித மெட்டாப்நியூமோவைரஸ் புதிய வைரஸ் அல்ல, பழைய வைரஸ் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பும் இருந்தது. அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம்‘ என்றார்

 மத்திய அரசு, மத்திய சுகாதார அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளும் இதைத்தான் கூறுகின்றன. இந்த வைரஸை அரசும் மருத்துவர்களும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து உலகம் முழுவதும் பரவும் வரை அனைத்தும் அதே மாதிரியான நிகழ்வுகள் மீண்டு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. தற்போது வீடுகளில் சானிடைசர்கள், கிருமிநாசினிகள் மற்றும் மாஸ்குகளை வைத்திருக்கும் நிலையும் எழுந்துள்ளது. HMPV வைரஸ் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது, எனவே பெற்றோர்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில், மருத்துவர் பினாகி அவர்களிடம் எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு பதில அளித்தார். 

HMPV வைரஸ் அறிகுறிகள் மற்றும் நோய் கண்டறிதல் என்றால் என்ன?

டாக்டர் பினாகி- குளிர்காலத்தில், இது பரவுவதற்கு சாதகமான சூழல் உள்ளது.  இது ஒரு சுவாச மண்டத்தை பாதிக்கும் ஆர்என்ஏ வைரஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது இந்த வைரஸ் தொற்று அதிகமாக பரவுகிறது. இந்த வைரஸ் தொற்று குறிப்பாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளையும், 60-65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களையும் பாதிக்கிறது. ஏனெனில் இந்த வயதில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். சுவாசிப்பதில் சிரமம், அதாவது சுவாச அமைப்பில் உள்ள பிரச்சனைகள், இருமல் ஆகியவை இதன் அறிகுறிகள்.

மேலும் படிக்க | HMPV Virus | பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் -தமிழக அரசு உத்தரவு

HMPV வைரஸ் பாதிப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்?

டாக்டர் பினாகி - மூக்கு அடைப்பு, மூக்கு ஒழுகுதல், சிவந்த கண்கள் மற்றும் தொண்டை புண் போன்ற அறிகுறிக்கள் சில காலம் நீடிக்கும். நிலை தீவிரமாக இருந்தால், நிமோனியா போன்ற அறிகுறிகள் ஏற்படலாம், இதில் சுவாசிப்பதில் சிரமம் இருக்கலாம். சுவாசிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றால், சளி மற்றும் இருமல் போன்ற சாதாரண அறிகுறிகள் இருக்கும். இதன் பாதிப்பு  2-7 நாட்கள் நீடிக்கும், இந்த காலகட்டத்தில் அது தானாகவே குணமாகும்.

HMPV வைரஸ் தொற்றுக்கு ஏதேனும் மருந்து உள்ளதா...அதை தவிர்ப்பது எப்படி?

மருத்துவர் பினாகி-  வைரஸ் தடுப்பு மருந்து இல்லை. அறிகுறிகளைக் கண்டறிந்த பிறகு மருத்துவர்கள்  அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கிறார்கள். 

HMPV வைரஸ் தொற்று வராமல்  பாதுகாத்துக் கொள்வது எப்படி?

மருத்துவர் பினாகி - நெரிசலான இடத்திற்குச் சென்றால், மாஸ் அணிந்து செல்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும். அங்கு பாதிக்கப்பட்ட நபர் யாரேனும் காணப்பட்டாலோ அல்லது அவருக்கு சளி அறிகுறிகள் தென்பட்டாலோ, அவரிடமிருந்து விலகி இருக்கவும். அவருடன் கைகுலுக்காதீர்கள். இருமல் அல்லது தும்மல் ஏற்பட்டால் கைகளை அவ்வப்போது கழுவவும். இது தொற்று பரவாமல் தடுக்க உதவும். சளி, காய்ச்சல் இருந்தால் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். 

மேலும் படிக்க | சென்னையிலும் HMPV வைரஸ்... பாதுகாத்துக் கொள்ள சாப்பிட வேண்டியவையும்...தவிர்க்க வேண்டியவையும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News