புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வட்டி விகிதம் மற்றும் பிற முக்கிய நிதிக்கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. வெள்ளிக்கிழமை வெளியிட்ட நிதிக்கொள்கை மதிப்பீட்டில் ரிசர்வ் வங்கி, தனது முக்கிய கொள்கை விகிதங்களை மாற்றாமல் வைத்துள்ளது. இதனால், வீட்டு மற்றும் வாகன கடன்களுக்கான EMI-க்கள் தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை.
டிசம்பர் 4 ம் தேதி தனது நிதிக்கொள்கை விகிதங்களின் அறிக்கையை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை (Repo Rate) 4 சதவீதத்திலும், ரிவர்ஸ் ரெப்போ வீதத்தை 3.35 சதவீதமாகவும் நீட்டிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறியது. நாணயக் கொள்கைக் குழு மற்ற நிதிக்கொள்கைகளைப் பொறுத்த வரை அதன் இணக்கமான நிலைப்பாட்டைத் தொடர முடிவு செய்தது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் (Shaktikanta Das) ஒரு ஆன்லைன் மாநாட்டில், ரிசர்வ் வங்கி குறைந்த பட்சம் நடப்பு நிதியாண்டுக்கும், அடுத்த ஆண்டுக்கும் நீடித்த அடிப்படையில் வளர்ச்சியை புதுப்பிக்க இடமளிக்கும் கொள்கை நிலைப்பாட்டை தொடர்ந்து பராமரிக்கும் என்று கூறினார்.
நிதிச் சந்தைகள் ஒழுங்கான முறையில் செயல்படுகின்றன என்றும், நிதி அமைப்பில் வைப்புத்தொகையாளர்களின் ஆர்வத்தைப் பாதுகாக்க மத்திய வங்கி உறுதிபூண்டுள்ளது என்றும் தாஸ் கூறினார்.
ALSO READ: இனி ATM-ல் 2000 ரூபாய் நோட்டு வராதா? 2000 ரூபாய் நோட்டுகளை இப்போது அச்சிடுவதில்லையா RBI?
நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் பொருளாதார மீட்சிக்கான புதிய அறிகுறிகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். பணப்புழக்கத்தைக் குறைக்க மேலதிக நடவடிக்கைகளை எடுக்க ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது. பொருளாதாரத்தை பொறுத்தவரை உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு பதிலளிக்க இந்த நடவடிக்கைகள் உதவும் என்றார் அவர்.
பல்வேறு நிதிச் செயல்முறைகளை ஏதுவாக்கவும், பணப்புழக்கத்தை சாதகமான நிலைக்கு கொண்டு வரவும், RBI அவ்வப்போது தேவையான புதிய நுட்பங்களைப் பயன்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி (Reserve Bank) ஆளுநர், பணவீக்கம் ஒரு சிக்கலான விஷயமாகத்தான் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டார். CPI பணவீக்கம் மூன்றாம் காலாண்டில் 6.8 சதவீதமாகவும், நான்காம் காலாண்டில் 5.8 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல துறைகள் மீட்பு பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டதால், பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது என்று அவர் கூறினார்.
ALSO READ: HDFC வாடிக்கையாளர்கள் உஷார்: வங்கிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது RBI
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 0.1 சதவீத விரிவாக்கத்துடன் மூன்றாம் காலாண்டில் சாதகமாக மாறும் என்று தாஸ் கூறினார். நான்காம் காலாண்டு 0.7 சதவீத வளர்ச்சியைக் காணும். 2021 ஆம் நிதியாண்டு, FY21-ன் வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று நிதிக்கொள்கை அறிவிப்பின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் துவங்கின.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR