₹1 கோடி வரை உடனடி கடன்... ICICI வங்கியின் Insta Loan திட்டத்தில்...

தொழில்முறை படிப்புகளைத் தொடரும் மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. ஆம், தற்போது தொழில்முறை மாணவர்களுக்கு சுமார் 1 கோடி ரூபாய் வரை உடனடி கடம் அளிக்க பிரதான வங்கி முடிவு செய்துள்ளது.

Last Updated : Jun 23, 2020, 09:50 AM IST
 • இந்த சேவையை பயன்படுத்தி கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சலில் உடனடி தேர்வு கடிதம் கிடைக்கும். இதற்காக வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
 • வங்கியில் நிலையான வைப்புகளில் 90%, கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
 • ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வெளிநாட்டு நிறுவனங்களில் கல்வி கற்க கடன் வழங்கப்படும்.
 • இந்தியாவிலேயே ஒரு பெரிய நிறுவனத்தில் படிக்க 10 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை கடன் அளிக்கப்படும்.
 • இந்த சலுகையின் கீழ், மாணவர்கள் 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தும் வகையில் மிக எளிதாக கடன் தொகையினை பெறலாம்.
 • கல்விக் கடனில் 8 ஆண்டுகள் வரை வரி விலக்கு அளிப்பதன் நன்மையும் உள்ளது.
₹1 கோடி வரை உடனடி கடன்... ICICI வங்கியின் Insta Loan திட்டத்தில்...

தொழில்முறை படிப்புகளைத் தொடரும் மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. ஆம், தற்போது தொழில்முறை மாணவர்களுக்கு சுமார் 1 கோடி ரூபாய் வரை உடனடி கடம் அளிக்க பிரதான வங்கி முடிவு செய்துள்ளது.

மருத்துவர், பொறியாளர் போன்ற தொழில்முறை படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சுமார் ஒரு கோடி வரை உடனடி கல்வி கடன் அளிக்க பிரபல தனியார் துறை வங்கியான ICICI முன்வந்துள்ளது.

READ | கனரா வங்கி தனது கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது...

இதற்காக ICICI வங்கி ரூ.1 கோடி வரை கடன் அளிக்கும் இன்ஸ்டா கல்வி கடன் (Insta Education Lone) என்னும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வங்கியின் வாடிக்கையாளர்கள் அவரது குடும்பத்தின் குழந்தையின் கல்விக்காக கடன் பெறலாம். இந்த கடனை எடுத்துக்கொள்வதன் மூலம், நீங்கள் நாட்டிலும் வெளிநாட்டிலும் எங்கு வேண்டுமானாலும் உயர் கல்வியைப் பெறலாம். இதன் பொருள், உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ உங்கள் குழந்தைகள் எங்கு படித்தாலும் கல்வி கடன் கிடைக்கும் என்பதாகும். ஆனால் இந்த சலுகை வங்கியில் நிலையான வைப்பு (Fixed Deposit) உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டா கல்வி கடன் திட்டத்தின் கீழ், வங்கியின் முன் அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களது நிலையான வைப்புத்தொகையின் அடிப்படையில் டிஜிட்டல் செயல்முறை மூலம் கல்வி கடனைப் பெறலாம். வங்கிக்கு சென்று கடன் செயல்முறை மற்றும் பணத்திற்காக காத்திருக்க தேவையில்லை.

ICICI வங்கியின் பாதுகாப்பற்ற சொத்துத் துறையின் தலைவர் சுதீப்தா ராய் இதுகுறித்து கூறுகையில், மில்லியன் கணக்கான மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, வங்கியில் செய்யப்பட்ட நிலையான வைப்புகளுக்கு பதிலாக கல்வி கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த கடனை கொண்டு மாணவர்கள் இப்போது தங்கள் பணத் தேவைகளைப் பற்றி கவலைப்படாமல் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் சேர விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் டிஜிட்டல் செயல்முறை மூலம் இந்த வசதியைப் பெறலாம். அதாவது இந்த செயல்முறைக்கு கோப்புகள் நிறப்ப வேண்டிய தேவை.

READ | SBI மற்றும் ICICI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மோசமான செய்தி காத்திருக்கிறது...

இன்ஸ்டா கல்வி கடனின் சிறப்பம்சம்...

 • இந்த சேவையை பயன்படுத்தி கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சலில் உடனடி தேர்வு கடிதம் கிடைக்கும். இதற்காக வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
 • வங்கியில் நிலையான வைப்புகளில் 90%, கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
 • ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வெளிநாட்டு நிறுவனங்களில் கல்வி கற்க கடன் வழங்கப்படும்.
 • இந்தியாவிலேயே ஒரு பெரிய நிறுவனத்தில் படிக்க 10 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை கடன் அளிக்கப்படும்.
 • இந்த சலுகையின் கீழ், மாணவர்கள் 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தும் வகையில் மிக எளிதாக கடன் தொகையினை பெறலாம்.
 • கல்விக் கடனில் 8 ஆண்டுகள் வரை வரி விலக்கு அளிப்பதன் நன்மையும் உள்ளது.

READ | ATM செல்ல தேவையில்லை; இனி வீட்டில் இருந்தபடியே பணம் பெறலாம்... எப்படி?

எப்படி விண்ணப்பிப்பது?

 • ICICI வங்கியின் இணைய வங்கி வலைதளத்தை பார்வையிடவும்.
 • இங்கு வங்கி கடனுக்கான பிரிவில் நீங்கள் கடன் தொகை, கடன் திருப்பி செலுத்தும் நேரம், கல்லூரி பெயர் மற்றும் செலவுகள் போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும்.
 • மாணவரின் பெயர், பிறந்த தேதி மற்றும் மாணவருடனான உறவு போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
 • விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை OTP அங்கீகரிக்க வேண்டும்.
 • பின்னர், செயலாக்கக் கட்டணத்தை செலுத்திய பிறகு, உங்களுக்கு அனுமதி கடிதம் கிடைக்கும்.

More Stories

Trending News