பொதுத்துறை வங்கியான கனரா வங்கி தனது கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.
ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன் வட்டி 0.40 சதவீதம் குறைந்து 6.90 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரெப்போ விகித குறைப்பு தொடர்ந்து, பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட வங்கியும் தனது MVLR-யை 0.20 சதவீதம் குறைத்துள்ளது. திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் ஜூன் 7 முதல் பொருந்தும் என்று வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ATM-ல் பணம் எடுக்க புதிய விதிமுறை; 6 மணி நேரம் காத்திருக்க வேண்டும்...
அனைத்து புதிய கடன்களும் RLLR உடன் இணைக்கப்பட்டுள்ளன. மே மாதத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வீதத்தை 0.40 சதவீதம் குறைத்த பின்னர், பல வங்கிகள் அதன் நன்மையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளன. சமீபத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் இந்தியா மற்றும் யூகோ வங்கி ஆகியவை ரெப்போ தொடர்பான கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.40 சதவீதம் குறைத்துள்ளன. முன்னதாக, மகாராஷ்டிரா வங்கியின் கூற்றுப்படி, ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து வகையான கடன்களின் வட்டி வீதமும் 0.40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மே மாதத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் குறைத்து 6.90 சதவீதமாக குறைத்தது. இதன் பின்னர், பல வங்கிகள் தங்கள் கடன் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன.
பாங்க் ஆப் மகாராஷ்டிரா அனைத்து வகை வங்கிக் கடன்களிலும் MCLR 0.20 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ளது. இது ஜூன் 8 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதன் பின்னர், ஒரு வருட காலத்திற்கு கடனுக்கான வட்டி விகிதம் 7.90 சதவீதத்திலிருந்து 7.70 சதவீதமாகக் குறைந்தது. அதே நேரத்தில், ஆறு மாத காலத்திற்கு கடனின் வட்டி விகிதம் 7.50 சதவீதமாக குறைத்துள்ளது.
வங்கி பணியில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு; அறப்போராட்டம் என எச்சரிக்கும் வைகோ...
முன்னதாக, இந்திய வங்கி ஜூன் 1 முதல் அதன் MCLR-லிருந்து 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவித்தது. இதன் மூலம், வீட்டு மற்றும் கார் கடன் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும். பழைய வாடிக்கையாளர்களின் கடன் EMI-யும் குறைக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்த வெட்டு ஆண்டு கடனில் ஆண்டு வட்டி விகிதத்தை 7.70 சதவீதமாகக் குறைக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது. இப்போது இந்த கடன் வீதம் 7.95 சதவீதமாகும். இதேபோல், ஆறு மாத கடனுக்கான வட்டி விகிதம் 7.60 சதவீதமாகவும், மாதாந்திர கடன் விகிதம் 7.50 சதவீதமாகவும் உள்ளது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ வீதத்துடன் இணைக்கப்பட்ட கடன்களின் வட்டி விகிதத்தையும் 0.40 சதவீதம் குறைத்து 6.85 சதவீதமாகக் குறைத்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.