அதிகரிக்கும் வைட்டமின் டி குறைபாடு - அறிகுறிகளும், எச்சரிக்கையும்..!

Vitamin D | வைட்டமின் டி குறைபாடு அண்மைக்காலமாக அதிகரித்து வருவதால் இந்த அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 28, 2024, 04:14 PM IST
  • வைட்டமின் டி உடலுக்கு அவசியம்
  • வைட்டமின் டி குறைபாடு அறிகுறிகள்
  • சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி
அதிகரிக்கும் வைட்டமின் டி குறைபாடு - அறிகுறிகளும், எச்சரிக்கையும்..! title=

Vitamin D deficiency Tips Tamil | இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியர்கள் மத்தியில் வைட்டமின் டி குறைபாடு அதிகரித்து வருவதாக லேட்டஸ்ட் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வைட்டமின் டி குறைபாடு ஏற்படும்போது, முதுகுவலி, உடல் வலி உள்ளிட்ட தீவிரமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். காலையில் சூரிய ஒளியில் கிடைக்ககூடிய வைட்டமின் டி, உணவு மூலம் கூட கிடைக்காது. இயற்கையாக கிடைக்கக்கூடிய அந்த ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்போது, நாட்பட்ட அளவில் பெரிய பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க நேரிடும்.

வைட்டமின் டி நன்மைகள்

வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியம், நோயெதிர்ப்பு மண்டலம், தசைகள் மற்றும் உடலின் பல்வேறு உறுப்புகள் மற்றும் அமைப்புகளின் செயல்பாட்டிற்கும் அவசியம். கால்சியத்தை உறிஞ்சுவதில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது, இது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது. உடலில் வைட்டமின் டி குறைபாடு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக இருக்க வைட்டமின் டி முக்கியம். இது ஆட்டோ இம்யூன் நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும், தசை பலவீனம் மற்றும் வலியைக் குறைக்கவும் உதவுகிறது. 

மேலும் படிக்க | சமைக்கும் போது அனைவரும் செய்யும் தவறு இதுதான்! என்னனு தெரிஞ்சுக்கோங்க!

வைட்டமின் டி குறைபாடு அறிகுறிகள்

வைட்டமின் டி குறைபாடு எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதன் குறைபாடு காரணமாக, எலும்புகள் பலவீனமடைகின்றன, இது காயத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், சோர்வு, பலவீனம் அதிகரிக்கும். தசைகள் பலவீனமடையத் தொடங்கும். மனச்சோர்வு, மனநிலை மாற்றங்கள் மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. வைட்டமின் டி குறைபாடு மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.

வைட்டமின் டி அதிகரிக்க டிப்ஸ்

சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி கிடைக்கும். சூரியக் கதிர்களால் சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு நபர் தினமும் 10-20 நிமிடங்கள், குறிப்பாக காலை அல்லது மாலை சூரிய ஒளியில் இருந்தால் போதுமானது. சூரிய ஒளியில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கிடைக்கும் ஆற்றல் அதிகமானதாக இருக்கும். இது தவிர, வைட்டமின் டி குறைப்பாட்டை போக்க எந்த உணவுகளை சாப்பிடுவது? என கேட்டால், வைட்டமின் டிக்காக முட்டையின் மஞ்சள் கரு, காளான் மற்றும் சால்மன் மற்றும் டுனா மீன்களையும் உட்கொள்ளலாம். மேலும், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | ஒரே வாரத்தில் அடிவயிறு தொப்பை கொழுப்பு குறைய 5 சிம்பிள் உடற்பயிற்சிகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News