பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) ரூ.2 கோடிக்கு கீழ் உள்ள ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, புதிய வட்டி விகிதங்கள் நாளை ஜூலை 4, 2022 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் இந்த மாற்றத்தை தொடர்ந்து ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை 10 முதல் 20 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது.
மேலும் படிக்க | 7th Pay Commission: பம்பர் டிஏ உயர்வு, ஊதியத்தில் பெரிய ஏற்றம் இருக்கும்
7 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 3% வட்டி விகிதத்தை வங்கி தொடர்ந்து வழங்கும், அதே நேரத்தில் பிஎன்பி 46 முதல் 90 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 3.25 சதவீத வட்டி விகிதத்தை தொடர்ந்து வழங்கும். 180 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான நாட்களில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் தொடர்ந்து 4.50 சதவீத வட்டியைப் பெறுகின்றன, அதே சமயம் 91 முதல் 179 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு தொடர்ந்து 4.00 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. பிஎன்பி இப்போது ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 5.30 சதவிகிதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை வட்டி விகிதத்தை 5.20 சதவிகிதத்தில் இருந்து 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.
இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 5.30 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக 20 அடிப்படை புள்ளிகளால் பிஎன்பி உயர்த்தியுள்ளது. மூத்த குடிமக்களுக்கு, பிஎன்பி அதன் இணையதள பக்கத்தில், ரூ.2 கோடிக்கும் குறைவாக டெபாசிட் செய்யும் மூத்த குடிமக்கள் அனைத்து முதிர்வுகளுக்கும் பொருந்தக்கூடிய விகிதங்களில் 50 பிபிஎஸ் கூடுதல் வட்டி விகிதத்தைப் பெறுவார்கள்.
மூத்த குடிமக்களாக இருக்கும் பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களின் விஷயத்தில், பிஎன்பி வரிச் சேமிப்பாளர் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தைத் தவிர, பொருந்தக்கூடிய விகிதத்தில் அதிகபட்ச வட்டி விகிதம் 150 பிபிஎஸ் ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. பிஎன்பி வழங்கும் இந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் முதலீட்டாளர்களை ரூ.15 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்ய அனுமதிக்கிறது. இந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தின் காலம் 91 முதல் 1111 நாட்கள் வரையிலும், வட்டி விகிதங்கள் 4.05 முதல் 5.55 சதவீதம் வரை இருக்கும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: பம்பர் டிஏ உயர்வு, ஊதியத்தில் பெரிய ஏற்றம் இருக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR