இரட்டை அதிர்ச்சி: 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பு; உற்பத்தி குறைந்தது

6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் சில்லறை பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 7.59% ஆக உயர்ந்தது. அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்ந்தது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 12, 2020, 07:44 PM IST
இரட்டை அதிர்ச்சி: 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பு; உற்பத்தி குறைந்தது title=

புது டெல்லி: கடந்த சில வாரங்களின் பொருளாதாரம் குறித்து வெளியாகி வரும் தகவல்களை வைத்து பார்த்தால், நாட்டின் பொருளாதாரம் இப்போது மந்தநிலையிலிருந்து மீண்டு வருவதைக் காட்டியது. ஆனால் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் தொழில்துறை உற்பத்தி புள்ளிவிவரங்கள் மீண்டும் மத்திய அரசாங்கத்தின் கவலையை அதிக்கப்படுத்தி உள்ளது. நாட்டின் சில்லறை பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 7.59% ஆக உயர்ந்தது. இது 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வாக இருக்கிறது. இதன்மூலம் உணவு மற்றும் உணவு பொருட்களின் விலை இன்னும் அதிக அளவில் உயர்ந்தது. பணவீக்கம் அதிகரிப்பது தொடர்ச்சியாக இது ஆறாவது மாதமாகும்.

சில்லறை பணவீக்கம்:
அரசாங்க தரவுகளின்படி, நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் சில்லறை பணவீக்கம் 2019 டிசம்பரில் 7.35% ஆக இருந்தது. அதே நேரத்தில், இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 1.97% ஆக இருந்தது. பணவீக்க விகிதம் 2019 ஜனவரியில் 2.05% ஆக இருந்தது. ஜனவரி மாதத்தில் பணவீக்கம் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) இலக்கு 4% ஐ விட அதிகமாக இருந்தது.

வளர்ச்சி:
அதே நேரத்தில், டிசம்பரில் தொழில்துறையின் உற்பத்தியின் வேகத்திலும் குறைவு ஏற்பட்டுள்ளது. தொழில்துறை உற்பத்தி டிசம்பரில் 0.3% அதிகரித்து 2.5% ஆக இருந்தது. உள்நாட்டு உற்பத்தித் துறையின் உற்பத்தி குறைக்கப்பட்டதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

2018 டிசம்பரில் 4.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, மின் உற்பத்தி 0.1% ஆக குறைந்துள்ளது. சுரங்கத் துறை உற்பத்தி 5.4% வளர்ச்சியைப் பதிவு செய்தது. அதேசமயம் இது 1% சரிவைக் கண்டது.

உணவு பணவீக்கம்:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் ஐ.ஐ.பி வளர்ச்சி 0.5% ஆக குறைந்துள்ளது. இது 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 4.7 சதவீதமாக இருந்தது. என்.எஸ்.ஓ வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உணவு பணவீக்கம் 13.63 சதவீதமாக குறைந்துள்ளது. இது 2019 டிசம்பரில் 14.14% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News