உங்கள் மனைவி பெயரில் சொத்து வாங்கினால் இவ்வளவு வரி சலுகையா? முழு விவரம்!

சொத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தாலோ அல்லது வீடு வாங்குவது பற்றி எண்ணினாலோ, பல நன்மைகளைப் பெற, அதை உங்கள் மனைவி பெயரில் பதிவு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.    

Written by - RK Spark | Last Updated : May 28, 2023, 06:16 AM IST
  • ஹரியானாவில்,பெண்களுக்கு 2 சதவீத விலக்கு அளிக்கப்படுகிறது.
  • ஆண்கள் 7 சதவீத முத்திரை வரி விகிதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
  • வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு வங்கிகள் தள்ளுபடிகளை வழங்குகின்றது.
உங்கள் மனைவி பெயரில் சொத்து வாங்கினால் இவ்வளவு வரி சலுகையா? முழு விவரம்! title=

அரசாங்கமும், வங்கிகளும் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் பெண்களுக்கு பலவிதமான சலுகைகளை  வழங்குகின்றது.  இந்த நன்மைகள் முத்திரைத் தீர்வைக் குறைப்பு, வரிச் சலுகைகள், வீட்டுக் கடன்களுக்கான தள்ளுபடி வட்டி விகிதங்கள் மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) ஆகியவற்றை உள்ளடக்கியது.  தனி உரிமையாளராகவோ அல்லது கூட்டு உரிமையாளராகவோ எதுவாக இருந்தாலும் பெண்கள் பெயரில் உள்ள சொத்துக்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது.  பெண்களின் பெயரில் வீடுகளை வாங்கினால் வரி விலக்கு உட்பட பல சலுகைகள் கிடைக்கும்.  எனவே நீங்கள் ஒரு சொத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தாலோ அல்லது வீடு வாங்குவது பற்றி எண்ணினாலோ, பல நன்மைகளைப் பெற, அதை உங்கள் மனைவி பெயரில் பதிவு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.  உங்கள் மனைவி, தாய் அல்லது மகளின் பெயரில் சொத்தை வாங்குவது, குறைக்கப்பட்ட முத்திரைக் கட்டணத்தைப் பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.  நாட்டிலுள்ள பல மாநிலங்கள் பெண்களுக்கு முத்திரை வரி விலக்குகளை அளிக்கின்றது. உதாரணமாக, ஹரியானாவில்,பெண்களுக்கு  2 சதவீத விலக்கு அளிக்கப்படுகிறது.  ஆனால் ஆண்கள் 7 சதவீத முத்திரை வரி விகிதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  மேலும் பல மாநிலங்களில் பெண்கள் 5 சதவீதத்தை மட்டுமே செலுத்த வேண்டும் என்கிற விதி உள்ளது.

மேலும் படிக்க | காலாவதியான கார்டுக்கு வந்த பில்... SBI கார்டுக்கு ₹2,00,000 அபராதம்!

இதுதவிர முத்திரைக் கட்டணத்தில் பெண்களுக்கு ஒரு சதவீத விலக்கு அளிக்கப்படுவதால், ஒரு பெண்ணுடன் சேர்ந்து ஒரு சொத்தை பதிவு செய்வதன் மூலம் மற்றொரு நன்மையும் கிடைக்கிறது.  முத்திரை வரி செலுத்துவது ஒரு குறிப்பிடத்தக்க நிதிக் கடமையாகும்.  தற்போதைய பணவீக்கம் மற்றும் அளவுக்கதிகமாக சொத்துக்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில் வீடு, பிளாட் அல்லது கடையின் பதிவுச் செயல்பாட்டின் போது இரண்டு சதவிகிதக் கழிவுகளைப் பெறுவது மிகவும் அவசியமானதாகிறது.  உதாரணமாக டெல்லியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஒரு சொத்தை வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், இப்போது நீங்கள் அந்த சொத்துக்கான பதிவு செயல்முறையை முடித்தாக வேண்டும்.  உங்கள் பெயரில் சொத்தை பதிவு செய்ய நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் ஏழு சதவீத பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும்.  இருப்பினும், உங்கள் மனைவி அல்லது உங்கள் தாய் போன்ற ஒரு பெண்ணின் பெயரில் சொத்தை பதிவு செய்ய நீங்கள் தேர்வுசெய்தால், நீங்கள் ஐந்து சதவீத பதிவுக் கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டும்.  இதன் மூலம், பதிவுச் செலவில், ஒரு லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தலாம்.

ஒரு பெண்ணின் பெயரில் பிரத்தியேகமாக சொத்து உரிமையை வைத்திருப்பதை விட, ஒரு பெண்ணை கூட்டு உரிமையாளராக சேர்த்து சொத்தை வாங்குவதன் மூலம் 1 சதவீத தள்ளுபடியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  இதன் மூலம் உங்களுக்கு ரூ.50,000 ரூபாய் வரை மிச்சமாகும்.  பெண்களின் பெயரில் சொத்து பதிவு செய்வதற்கான முத்திரை வரி விலக்கு, டெல்லியின் புவியியல் எல்லைக்கு அப்பால் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான நேரங்களில் ஒரு பெண்ணின் பெயரில் சொத்து இருந்தாலோ அல்லது இணைச் சொந்தமாக இருக்கும்போதோ, ​​நீங்கள் வீட்டுக் கடனைப் பெற விண்ணப்பித்தால் அதற்கான செயல்முறை துரிதப்படுத்தப்பட்டு, உங்களுக்கு நிதி ரீதியாக பலன்கள் கிடைக்கும்.  வங்கிகள் பொதுவாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்குகின்றது. பணிபுரியும் பெண் அல்லது சொந்தமாக தொழில் செய்யும் பெண்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தால், அவரது வருமானம் இணை விண்ணப்பதாரரின் வருமானம் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு அதிக கடன் தொகை வழங்கப்படும்.

மேலும் படிக்க | மணிக்கு 330 கிமீ டாப் ஸ்பீட் மைலேஜ் கொண்ட McLaren Artura கார் இந்தியாவில் அறிமுகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News