சூரியனின் அருளால்... தை மாதத்தில் பட்டையைக் கிளப்ப போகும் சில ராசிகள்

தை மாத ராசி பலன்: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுங்கள் கூறுவார்கள். தமிழ் மாதங்களில் பத்தாவது மாதமான தை மாத பிறப்பு மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது.

சூரியன் தை மாதத்தில் மகர ராசிக்குள் நுழைவதால் தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. வரும் ஜனவரி 14-ஆம் தேதி, சனியின் ராசியான மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் சிலர் ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்கள் காத்திருக்கின்றன.

1 /10

சூரியன் பெயர்ச்சி 2025: மகர ராசியில் சூரிய பெயர்ச்சி கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் மாதம் தோறும் தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். சூரியன் ராசியை மாற்றிக் கொள்ளும் போது தமிழ் மாதம் பிறக்கிறது. அந்த வகையில், சூரியன் மகர ராசியில் பெயர்ச்சியாகும் போது தை மாதம் பிறக்கிறது.

2 /10

வரும் ஜனவரி 14-ஆம் தேதி அன்று, மகர சங்கராந்தி தினத்தில், தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் சஞ்சரிப்பார். இதனால் சில ராசிகள் பெரிய அளவில் நிதி ஆதாயங்களை பெறுவார்கள் என்றும் தடைபட்ட வேலை அனைத்தும் முடியும் என்றும் ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.  

3 /10

4 /10

கன்னி: தை மாதம் கன்னி ராசியினருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் மாதமாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதால் மனம் அமைதி பெறும். எண்ணிய காரியங்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும்.

5 /10

சிம்மம்: தை மாதம் சிம்ம ராசியினருக்கு சூரியனின் அருளால் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும். தடைபட்ட பணிகள் அனைத்தும் நிறைவேறும். விரும்பிய வெற்றி கிடைக்கும். பண வரவு மகிழ்ச்சியை கொடுக்கும். இதன் மூலம் கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.  

6 /10

விருச்சிகம்: தை மாதம் விருச்சிக ராசியினருக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும் மாதமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகம், கல்வி சம்பந்தமான வேலைகளிலும் ஆதாயம் உண்டாகும்.

7 /10

மகரம்: தை மாதம் மகர ராசியினருக்கு பண வரவை கொடுக்கும் மாதமாக இருக்கும். வீடு நிலம் வாங்கும் யோகம் கைகூடும்.. முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். வெளியூர் பயணம் போகும் வாய்ப்பு உண்டு.. இதனால் ஆகாயமும் கிடைக்கும் ஆடம்பரத்திற்காக செலவு செலவு செய்வீர்கள். பழைய முதலீடுகளிலிருந்து நல்ல இலாபம் கிடைக்கும்.

8 /10

கும்பம்: தை மாதம் கும்ப ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் மாதமாக இருக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டு கிடைக்கும். முதலீடுகளால் லாபம் உண்டாகும். வாழ்க்கையில் மனதிற்கு சந்தோஷம் தரும் நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.  

9 /10

மீனம்: தை மாதம் மீன ராசியினருக்கு, வெற்றிகளை அள்ளிக் கொடுக்கும் மாதமாக இருக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும் எனலாம் இலையில் வியாபாரத்தில் வருமானம் கூடும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவார்கள். இந்த காலகட்டத்தில் பணப் பலன்களையும் சுப பலன்களையும் பெறுவீர்கள்.

10 /10

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.