2022ம் ஆண்டில் இந்த சிறந்த பத்து கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்வது லாபகரமானதாக கருதப்படுகிறது.
1) ஈத்ரியம் :
2022ல் முதலீடு செய்வதற்கான சிறந்த கிரிப்ட்டோக்களில் இது ஒரு சிறப்பான தேர்வாகும், ஏனெனில் இது நீண்ட காலத்திற்கு மற்ற எவ்வித முதலீட்டுகளையும் மிஞ்சக்கூடியதாக இருக்கிறது. 2016 முதல் 2022ம் ஆண்டின் முற்பகுதிய் வரை இதன் விலை $10 முதல் $3,550 வரை யறிந்து 32,000%க்கும் அதிகமாக இருந்தது.
2) ஏப்காயின் :
இது 2022ல் முதலீடு செய்வதற்கான சிறந்த கிரிப்ட்டோக்களில் மற்றொரு சிறப்பான தேர்வாகும். இது 10,000 என்எஃப்டிக்களால் உருவாக்கப்பட்ட தளமாகும், இந்த காயின்களை வாங்கும்போது சிறந்த ஆல்ட்க்காயின்ஸ்களையும் வழங்குகிறது. இதன் விலை ஆரம்பத்தில் $6.40 ஆக இருந்து பின்னர் சில மணி நேரங்களில் ஒரு டோக்கனுக்கு $42 ஆக உயர்ந்தது.
மேலும் படிக்க | இந்த ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்: 14% அகவிலைப்படி அதிகரிப்பு
3) பிட்காயின் :
ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் வாங்குவதற்கான சிறந்த தேர்வு பிட்காயின். 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் $27,000 - $34,000 ஆக இதன் மதிப்பு இருந்தது. ஆனால் இதன் மதிப்பு இந்த ஆண்டின் இறுதிக்குள் $74,000 மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4) பைனான்ஸ் காயின் :
பைனான்ஸ் காயின் ஆனது வர்த்தகம் மற்றும் சில வாடிக்கையாளர்கள் தொடர்பான உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி ஆகும். இதன் பரிமாற்றத்தின் போது வாடிக்கையாளர்கள் குறைந்த கமிஷன்களை செலுத்தி பயனடையலாம். ஈத்ரியம், பிட்காயின் போன்றவற்றையும் இதில் பரிமாறிக்கொள்ளலாம்.
5) யூனிஸ்வேப் :
மூன்றாம் தரப்பினர் இல்லாமல் டிஜிட்டல் நாணயங்களை வாங்கவும், விற்கவும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் ஒரு சிறந்த தளமாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதன் மதிப்பு $5.70ஐ மிஞ்சியது, இந்த நாணயம் ஒரு டோக்கனுக்கு $18ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6) சொலனா :
இது பிளாக்செயின் தொழிநுட்பத்தை அனுமதியுடன் நிதி தீர்வுகளை வழங்குகிறது. கடந்த ஆண்டில் வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோ டோக்கன்களில் இதுவும் ஒன்றாகும் 2022ம் ஆண்டின் இறுதிக்குள் 440% அதிகரித்து ஒரு டோக்கனுக்கு $450க்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7) டாகிகாயின் :
கடந்த ஆண்டு மிகவும் பிரபலமாக வாங்கப்பட்ட க்ரிப்ட்டோக்களில் இதுவும் ஒன்றாகும், இந்த நாணயத்தை பற்றி அடிக்கடி எலன் மஸ்க் ட்வீட் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஐந்து மாதங்களில் 19.000% ஐ எட்டியது, இதில் முதலீடு செய்வது மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8) கார்டானோ :
இந்த கிரிப்டோ ஆனது ஒரு பிரபலமான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பிளாக்செயின் தொழில்நுட்பமாகும், மேலும் இது பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் கூறப்படுகிறது. இந்த கிரிப்டோ நாணயங்கள் கணிசமாக உயர்ந்து அதிக லாபத்தை தரக்கூடியதாக கூறப்படுகிறது.
9) டெர்ரா :
இது முதலில் ஸ்டேபிள்காயின்களை மாற்றுவதற்க்காக வடிவமைக்கப்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பமாகும், இது அமெரிக்க டாலர் மதிப்பிலான டோக்கன் விலையை பராமரிக்கிறது. 2022ல் டெர்ரா நாணயம் 300% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10) அவலாஞ்சி :
அவலாஞ்சியில் முதலீடு செய்வது அதிக லாபத்தை தரும், இதில் முதலீடு செய்த பலரும் அதிகப்படியான லாபத்தை ஈட்டியுள்ளனர். ஜூலை 2020 முதல் ஏப்ரல் 2022 வரை இந்த நாணயத்தின் விலை $4.13 லிருந்து $98.58 ஆக 2,200%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
(மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் பரிந்துரைகள் மட்டுமே. முதலீடு செய்வது முழுக்க முழுக்க உங்களது சொந்த விருப்பம்)
மேலும் படிக்க | தினசரி ரூ.167 முதலீடு செய்தால் ஓய்வு காலத்தில் கோடியில் அள்ளலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR