Union Budget 2021: வரலாற்றில் முதல் முறையாக Paperless பட்ஜெட்..!!

இந்திய சுதந்திரம் அடைந்து முதல் முறையாகப் பட்ஜெட் அறிக்கை அச்சிடப்படாமல் தாக்கல் செய்வது என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த முடிவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளது 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 11, 2021, 03:37 PM IST
  • சுதந்திர இந்தியாவில் முதல் முறையாகப் பட்ஜெட் அறிக்கை அச்சிடப்படாமல் டிஜிட்டல் முறையில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
  • பட்ஜெட் கூட்டத்தொடர், கொரோனா வழிமுறைகளை பின்பற்றி, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது.
  • மோடி அரசு பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
Union Budget 2021: வரலாற்றில் முதல் முறையாக Paperless பட்ஜெட்..!! title=

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இருக்கும் எனச் சில நாட்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். சுதந்திர இந்தியாவில் முதல் முறையாகப் பட்ஜெட் அறிக்கை அச்சிடப்படாமல் டிஜிட்டல் முறையில் விநியோகம் செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று  (Corona Virus)இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தாத நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர், கொரோனா வழிமுறைகளை பின்பற்றி, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது. அந்த வகையில், தொற்று பரவல் காரணமாகப் பட்ஜெட் அறிக்கை அச்சிடப்படாமல் பேப்பர்லெஸ் முறையில் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பட்ஜெட் அறிக்கையை பிரிண்ட் செய்ய பலர் ஒரே இடத்தில் தங்கி 14 நாட்கள் பணியாற்ற வேண்டும். அதோடு அவர்கள் பிரிண்டிங் செய்யப்படும் இடத்திலிருந்து வெளியே செல்லவும் அனுமதி இல்லை. அதனால் தொற்று பரவல் உள்ள நிலையில், இதனை தவிர்க்க நிதி அமைச்சகம் (Finance Ministry) இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்திய சுதந்திரம் அடைந்து முதல் முறையாகப் பட்ஜெட் அறிக்கை அச்சிடப்படாமல் தாக்கல் செய்வது என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த முடிவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி அரசு (Modi Government) பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. முதலில் பட்கெட் அறிக்கை தாக்கல் செய்யப்படும் நாள் மாற்றப்பட்டது. பின்னர் பட்ஜெட் அறிக்கையை சூட்கேஸில் கொண்டு வரும் நிலையை மாற்றியமைத்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிவப்பு நிற துணியில் கொண்டு வந்தார்.

அதே போல் இந்த வருடம் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, அலவா தயாரிக்கும் பழக்கமும் பின்பற்றப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ | நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 அன்று தொடக்கம்.. பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News