#by-election: அதிரடி காட்டும் காங்கிரஸ்! மேகாலயாவில் ஆட்சியை பிடித்தது!

மேகாலயா அம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மியானி டி ஷிரா வெற்றி பெற்றுள்ளார்.!  

Last Updated : May 31, 2018, 02:40 PM IST
#by-election: அதிரடி காட்டும் காங்கிரஸ்! மேகாலயாவில் ஆட்சியை பிடித்தது! title=

கடந்த மே 28ம் தேதி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகளிலும், 4 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் ஆரம்பம்மாகியது. இதில் பீகாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், உ.பி.யில் சமாஜ்வாதி ஆகியகட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், நாகலாந்து மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியவாத ஜனநாயக முன்னேற்ற கட்சி 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், நாகா மக்கள் முன்னணி பின் தங்கியுள்ளது.

இதையடுத்து, மேகாலயா அம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மியானி டி ஷிரா வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோன்று, பஞ்சாப் மாநில் ஷாகோட் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. இங்கு போட்டியிட்ட பாஜகவின் கூட்டணிக்கட்சியான அகாலிதளம் தோல்வி முகத்தில் உள்ளது. 

உத்தரகண்ட் மாநிலம் தாரலி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 198 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். மேற்குவங்க மாநிலம் மகேஷ்தாலா சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர் 32,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்  என்பது குறிபிடத்தக்கது.

Trending News