சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு எதிராக கண்டனம் தீர்மானம் கொண்டு வந்து நீதித்துறையின் செயல்பாட்டை கட்டுப்படுத்தி ஆதாயம் தேட முயற்சிக்கிறது காங்கிரஸ் என பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கண்டனம் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக காங்கிரஸ் மாநில கட்சிகளையும் வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தினை துவக்கியுள்ளது.
இது குறித்து பா.ஜ.க செய்தி தொடர்பாளரும், மூத்த வழக்கறிஞருமான நளின் கோஹ்லி கூறியது செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது...!
சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகள் சிலர் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்து கொண்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கண்டனம் தீர்மானம் கொண்டு வந்து பதவியை பறிக்க நினைக்கும் காங்கிரஸின் முயற்சி வீணான ஒன்று எனவும், நீதித்துறையின் செயல்பாட்டை கட்டுப்படுத்தி ஆதாயம் தேட நினைக்கும் காங்கிரஸ் கனவு பலிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.