close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

20-04-2019: சனிக்கிழமை நாளான இன்று உங்கள் ராசிபலன்!!

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், அதற்க்கான பலன்கள் என்னவென்று பார்ப்போம்!! 

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Apr 20, 2019, 09:30 AM IST
20-04-2019: சனிக்கிழமை நாளான இன்று உங்கள் ராசிபலன்!!
Zee News Tamil
சனிக்கிழமை தினபலன்!!
 
மேஷம்: 
இன்று பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் சிரமம் தந்தாலும் ஏற்றுக் கொண்டு முயற்சியினால் வெற்றிகளை ஈட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர். எதிலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். கிடைக்கப் பெற்ற பணத்தை தவறான வழிகளில் முதலீடு செய்ய நேரும். ஆகவே மிகுந்த எச்சரிக்கை தேவை. வாழ்நாள் முழுவதும் ஏற்படவிருக்கும் கஷ்டங்களை அறியாமல் தவறான முடிவுகளில் இறங்க வேண்டாம். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
 
ரிஷபம்: 
இன்று சன்மானங்கள் பெறுவது தொடர்ந்து நடைபெறும். அரசு அலுவல்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.. வயதானவர்கள் தீர்த்த யாத்திரை செல்வார்கள், மகான்களின் தரிசனமும் கிட்டும். சுபகாரியங்கள் அதன் பின்னே நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
 
மிதுனம்:  
இன்று பழைய சிக்கல்கள் யாவும் தீரும். சகோதர, சகோதரிகள் பாசமாக நடந்து கொள்வார்கள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். புது முயற்சிகள் பலிதமாகும். நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்துபோகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
 
கடகம்: 
இன்று புத்திசாலித்தனமாக இயங்குவதற்குரிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கல்வியில் சாதனை செய்வதற்குரிய சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் தம்பதிகளிடையே கருத்து ஒற்றுமை மேலோங்கும். ஊதிய உயர்வுக்கான சூழ்நிலையும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
 
சிம்மம்: 
இன்று சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். கோயில்  விஷயங்களை முன்நின்று நடத்துவீர்கள். . புத்திசாலித்தனத்துடன் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
 
கன்னி: 
இன்று வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் தரும். பணநடமாட்டம் சீராக இருந்து வரும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை சிலருக்கு ஏற்படும். தம்பதிகளுக்குள் ஒவ்வொருவரால் அனுகூலம் ஏற்படும். எதிரிகள் அடங்கிப் போவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6
 
துலாம்: 
இன்று உங்களுடைய புத்திசாலித்தனத்தால் புதிய தொழில் துடங்குவதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கல்வியில் சாதனை செய்வதற்குரிய சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் தம்பதிகளிடையே கருத்து ஒற்றுமை மேலோங்கும். ஊதிய உயர்வுக்கான சூழ்நிலையும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6
 
விருச்சிகம்: 
இன்று சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9
 
தனுசு: 
இன்று உங்களது சேமிப்புகளை பெருக்கிக் கொள்ளுங்கள். நெல், கரும்பு, மஞ்சள், எள், கோதுமை போன்ற பயிர்களில் நல்ல லாபம் கிடைக்கும். பருத்தி ஆடைகள் சார்ந்த துறையினருக்கும் பொன்னான காலமிது. தங்களது வியாபாரங்களைப் பெருக்கிக் கொள்வீர்கள். பெண்களுக்கு, கணவரிடத்திலும், பிள்ளைகளிடத்திலும் அன்பும் பாசமும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 
 
மகரம்: 
இன்று வீணான பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம். நீங்கள் செய்யும் உத்தியோகத்தில் சிறந்து விளங்குவீர்கள். 2013 மே மாதத்திற்குப் பின் விரும்பிய பதவி உயர்வு, பணிஇடமாற்றம், சம்பள உயர்வு ஆகியவைகளைக் கிடைக்கப் பெறுவீர்கள். மேலதிகாரிகளிடம் அனுசரனையுடன் நடந்து கொள்ளவும். ஏனெனில் சில பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
 
கும்பம்: 
இன்று லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. நடைப்பயிற்சி, யோகா, தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். புதிய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். யாருக்கும் ஜாமீன், காரண்டர் கையெழுத்திட வேண்டாம். உப்பு சப்பில்லாத விஷயத்திற்குக்கூட மனைவியுடன் சண்டை சச்சரவுகள் வரும். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
 
மீனம்: 
இன்று உங்களை கண்டும் காணாமல் போன பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். பிரச்னைகள் எதுவானாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்கு கிடைக்கும். நாடாளுபவர்கள், வேற்று மொழிக்காரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6