போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று (இன்று) அதாவது பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. போகி என்றால் போகங்களை அனுபவிப்பவன் அதாவது எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிப்பவன் என்று பொருள்.
இந்தநாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.
வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
போகி பண்டிகை இந்திரனுக்காக ஆயர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.