இதுக்கு இதுதான் அர்த்தமா? முன்னோர்களின் கண்டுபிடிப்பு.!

மூடநம்பிக்கை என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் பல விஷயங்களின் நம் முன்னோர்களின் அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகள் உள்ளன. 

Written by - Dayana Rosilin | Last Updated : May 17, 2022, 06:56 PM IST
இதுக்கு இதுதான் அர்த்தமா? முன்னோர்களின் கண்டுபிடிப்பு.! title=

ஆமை புகுந்த வீடு விளங்காது

ஆமைகளுக்கு இயற்கையாகவே திசை கண்டறியும் சக்தி உள்ளது. இதனால், பழங்காலங்களில் மீனவர்களும்,முத்து குளிப்பவர்களும் ஆமைகளை வீட்டில் வைத்து வளர்த்துள்ளார்கள். கடலுக்கு செல்பவர்களின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் இல்லை என்பதால், அவர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். ஆமை இருக்கும் வீடு அதனால் வேண்டாம் என அதற்கு காரணம் சொல்வார்கள். அதுவே, ஆமை புகுந்த வீடு விளங்காது எனவாகிவிட்டது. 

நகத்தை கடித்தால் தரித்திரம்

நம்மில் பலரும் நகத்தை கடித்து துப்புவது உண்டு. நகத்தை கடிக்கும்போது அதனுள் இருக்கும் அழுக்கு வயிற்றிர்குள் சென்று பல்வேறு நோய்கள்வர காரணமாகி விடும் அதனை தொடர்ந்து மருத்துவத்திற்காக நாம் சேர்த்து வைத்த பணத்தை செலவு செய்ய நேரிடும். அதனால் தரித்திரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் நகத்தை கடித்தால் தரித்திரம் என்பார்கள். 

புளியமரத்தின் கீழே உறங்கினால் பேய் அடிக்கும் 

புளியமரம் இரவு நேரங்களில் அதிகமான கார்பன்-டை-ஆக்சைடை வெளிவிடும். ஆக்சிஜனை ஸ்வாசித்து வாழும் மனிதர்கள் புளியமரத்தின் அருகே உறங்கினால் ஸ்வாசம் கிடைக்காமல் மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த மூச்சு திணரலையே பேய் அடிப்பது என்று கூறுவார்கள். 

வீட்டிற்கு முன்னால் முருங்கை மரத்தை வைக்க கூடாது 

மரங்களிலேயே மிகவும் பலம் குறைந்த மரம் என்றால் அது முருங்கை மரம்தான். பலமாக காற்று வீசினால் விழக்கூடிய முருங்கை மரத்தை வீட்டின் முன்பு வைத்தால் வாசலில் விளையாடும் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு இருக்காது என்பதற்காகவும், அந்த மரத்தில் கம்பிளி பூச்சி உள்ளிட்ட சில விஷதன்மை உள்ளவை வர வாய்ப்புள்ளது என்பதாலும் முருங்கை மரத்தை வீட்டிற்குள் வைக்க கூடாது என்பார்கள். 

பெண்கள் தலைவிரி கோலமாக இருக்கக்கூடாது 

பெண்கள் வீட்டில் தலை முடியை விரித்துபோட்டிருந்தால் சமையல் செய்யும்போது அதில் முடி விழ வாய்ப்புள்ளது. இதனால் வீட்டில் உள்ள ஆண்களோ அல்லது குழந்தைகளோ அந்த உணவை உட்கொள்ளும்போது குடலுக்குள் சென்று வயிற்று போக்கு உள்ளிட்ட உடல் உபாதை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பெண்கள் தலைவிரிகோலமாக இருக்ககூடாது என்பார்கள். 

மேலும் படிக்க | 500 ஆண்டுகள் பழமை... ரூ.25 கோடி மதிப்பு கொண்ட பச்சை கல் லிங்கம் மீட்பு - இருவர் கைது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News