விருதை ஏற்க மறுத்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா

நம்ம பெங்களுரு என்ற அறக்கட்டளை சார்பில் 'நம்ம பெங்களுரு விருது' ஒன்று வழங்கப்பட்டது. 

Last Updated : Mar 25, 2018, 12:37 PM IST
விருதை ஏற்க மறுத்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா title=

கர்நாடக மாநில டிஐஜி ரூபா சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, சிறைக்குள் பல நவீன வசதிகள் செய்து தரப்படுகிறது மேலும் அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது என கூறி தமிழக, கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியவர். 

இந்நிலையில் நம்ம பெங்களுரு என்ற அறக்கட்டளை சார்பில் 'நம்ம பெங்களுரு விருது' ஒன்று வழங்கப்பட்டது. ஆனால் அதை ரூபா வாங்க மறுத்து விட்டார்.

இது குறித்து அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில், இந்த விருதை ஏற்க என் மனசாட்சி இடம் தரவில்லை, ஒவ்வொரு அரசு ஊழியர்களும் நடுநிலையான சமநிலையை மட்டுமே அரசியல் அமைப்புகளிலிருந்தும், அறக்கட்டளை அமைப்புகளிடமிருந்தும் எதிர்பார்ப்பதாக அவர் குறிபிட்டுள்ளார்.

Trending News