முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு!

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 3, 2021, 04:27 PM IST
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு! title=

நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தினசரி எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டி வருகிறது. இது இந்தியாவில் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது. கோவிட்-19 தொற்று தற்போது தீவிரமடைந்துவரும் நிலையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.

முதுநிலை (NEET) மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கொரோனா (Coronavirus) காரணமாக 4 மாதங்கள் வரை ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருக்கிறது. மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு அரப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ | அரியலூர் மாணவி அனிதா வீடியோ பதிவு சர்ச்சை, அதிமுக அமைச்சர் மீது மோசடி புகார்

எம்பிபிஎஸ் இறதியாண்டு பயிலும் மாணவர்கள், லேசான தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு தொலைத்தொடர்பு வாயிலாக ஆலோசனை வழங்குவது அல்லது கொரோனா நோயாளிகளை கண்காணிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்தவும், தகுதிவாய்ந்த செவிலியரகள், முழு நேர கொரோனா பணியில், அவர்களது மூத்த செவிலியர்கள் அல்லது மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் பணியாற்ற அனுமதிக்கலாம் என்றும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்., எம்.டி., முதுநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக தேசிய அளவில் நடத்தப்படும் இந்த முதுநிலை நீட் தேர்வு, முன்னதாக ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பெருந்தொற்று காரணமாக ஏப்ரல் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இப்போது கொரோனா பரவல் மேலும் மோசமடைந்திருக்கும் நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. சில மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், பெரும்பாலான மாணவர்கள் இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News