JEE Advanced 2020: தேர்வுத் தேதியில் மாற்றம், முழு விவரம் உள்ளே!!

பல்வேறு IIT-களில் சேருவதற்கான தேர்வு, முன்னர் அறிவிக்கப்பட்ட படி, 2020 செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு பதிலாக, இப்போது 2020 செப்டம்பர் 27 அன்று நடத்தப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2020, 05:10 PM IST
  • JEE Advanced 2020 அதாவது IIT JEE Advanced தேர்வு தேதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
  • தேர்வு குறித்த சமீபத்திய தகவல்கள் மற்றும் புதுப்பிப்புகள் ஆன்லைனில் வெளியிடப்படும்.
  • JEE Main 2020 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் IIT JEE Advanced தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள்.
JEE Advanced 2020: தேர்வுத் தேதியில் மாற்றம், முழு விவரம் உள்ளே!! title=

JEE Advanced 2020 அதாவது IIT JEE Advanced தேர்வு தேதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பல்வேறு IIT-களில் சேருவதற்கான தேர்வு, முன்னர் அறிவிக்கப்பட்ட படி, 2020 செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு பதிலாக, இப்போது 2020 செப்டம்பர் 27 அன்று நடத்தப்படும். இது கணினி அடிப்படையிலான தேர்வாக இருக்கும், இரண்டு ஸ்லாட்டுகளில் நடத்தப்படும். காலை B.Tech கோர்சுகளுக்கும் பிற்பகல் B-Arch கோர்சுகளுக்கும் தேர்வுகள் நடக்கும்.

இவ்வாண்டு, JEE Advanced 2020-க்கான தேர்வுகளை ஐ.ஐ.டி டெல்லி நடத்துகிறது. jeeadv.ac.in என்ற வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட மாற்றப்பட்ட அட்டவணையை கீழே சரிபார்க்கவும். JEE Mains 2020 தேர்வுகளின் முடிவு அறிவிப்பில் எதிர்பார்க்கப்படும் தாமதம் காரணமாக JEE Advanced 2020 -க்கான தேதிகள் திருத்தப்பட்டுள்ளன என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். JEE Mains தேர்வுகளுக்கான முடிவுகள் செப்டம்பர் 11, 2020-ல் வரும் என கூறப்படுகிறது.

ALSO READ: JEE, NEET தேர்வு: இந்த மாநிலத்தில் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்தை அளிக்கும் அரசு!!

மாணவர்களுக்கான முக்கிய தேதிகள்:

Activity Date
JEE (Main) 2020 [Computer Based Test by NTA] 06-01-2020 to 11-01-2020 &

01-09-2020 to 06-09-2020
Declaration of JEE (Main) 2020 Results By 31-01-2020 &

By 11-09-2020 (tentative)
JEE (Advanced) 2020  SUN, 27-09-2020

Paper 1 : 09:00 – 12:00 IST

Paper 2 : 14:30 – 17:30 IST
Declaration of JEE (Advanced) 2020 Results MON, 05-10-2020
Architecture Aptitude Test (AAT) THU, 08-10-2020
Declaration of AAT results SUN, 11-10-2020
Tentative Start of Seat Allocation Process TUE, 06-10-2020
Tentative End of Seat Allocation Process MON, 09-11-2020

 

JEE Advanced 2020 க்குத் தோன்றும் அனைத்து மாணவர்களும் அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeeadv.ac.in –ஐ அவ்வப்போது பார்த்துக்கொண்டிருக்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு குறித்த சமீபத்திய தகவல்கள் மற்றும் புதுப்பிப்புகள் ஆன்லைனில் வெளியிடப்படும்.

வழங்கப்பட்ட அட்டவணையின்படி, பல்வேறு ஐ.ஐ.டி-க்களில் சேர்க்கைக்கான செயல்முறை நவம்பர் 9, 2020 க்குள் நிறைவடையும். இந்த ஆண்டு, தொற்றுநோய் மற்றும் அடுத்தடுத்த லாக்டௌனால் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக, ஐ.ஐ.டி.களில் சேருவதற்கான செயல்முறை தாமதமாகியுள்ளது. இட ஒதுக்கீட்டு செயல்முறை முடிந்ததும் ஐ.ஐ.டி.களில் வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வகுப்புகள் ஆன்லைனில் இருக்குமா அல்லது ஆஃப்லைனில் இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

JEE Main 2020 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் IIT JEE Advanced தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள். இந்த ஆண்டு, பல பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களுக்கான அளவுகோல்கள் தளர்த்தப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். 

ALSO READ: NEET 2020: ஒரு அறையில் 12 பேர் மட்டுமே அனுமதி, இது போன்ற அம்சங்கள் தேர்வில் காணப்படும்!

Trending News