2019-2020 கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் முடிவுகளை பல மாநிலங்கள் அறிவித்துள்ளன. இருப்பினும், சில மாநிலங்களில் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இவை இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் தொற்று பரவியதால், பொதுத் தேர்வுகளின் முடிவுகளின் அறிவிப்பு தாமதமானது. தொற்று பரவலைத் தடுக்க நாடு தழுவிய லாக்டௌன் விதிக்கப்பட்டது.
இந்த வாரம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் (Tamil Nadu Class 10 Results) மற்றும் கர்நாடகா SSLC முடிவுகள் ஆகியவை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், 2020 ஆம் ஆண்டின் மேற்கு வங்க கூட்டு நுழைவுத் தேர்வுகளின் (WBJEE) முடிவுகள் மற்றும் ஒடிசா 12 ஆம் வகுப்பு முடிவுகள் ஆகியவையும் அறிவிக்கப்பட உள்ளன.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் போர்டு தேர்வு முடிவுகளின் பட்டியல் பின் வருமாறு:
தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 2020
இந்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை தமிழகத்தில் சுமார் 9.7 லட்சம் மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அறிவிக்கப்பட்டதும், மாணவர்கள் தங்கள் முடிவுகளை dge.tn.gov.in, dge.tn.nic.in அல்லது tnresults.nic.in ஆகிய வலைத்தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
ஜூன் மாதம் தமிழக அரசு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்புக்கு நேரடியாக தேர்ச்சி பெறுவார்கள் என்றும் அறிவித்திருந்தது. காலாண்டு மற்றும் அரை ஆண்டு தேர்வுகளின் செயல்திறன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
கர்நாடக SSLC முடிவுகள் 2020
கர்நாடக இடைநிலைக் கல்வித் தேர்வு வாரியம் (KSEEB) இந்த வாரம் SSLC அதாவது 10 ஆம் வகுப்பு முடிவுகளை வெளியிட வாய்ப்புள்ளது. முன்னதாக, கர்நாடக கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் கர்நாடகா 10 ஆம் வகுப்பு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அறிவிக்கப்பட்டதும், கர்நாடக SSLC முடிவுகளை kseeb.kar.nic.in அல்லது karresults.nic.in ஆகிய வலைத்தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். சுமார் 8 லட்சம் மாணவர்கள் கர்நாடக SSLC தேர்வுகளை இவ்வாண்டு எழுதியுள்ளனர்.
WBJEE முடிவுகள் 2020
மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி WBJEE முடிவுகள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளார். இதன் விவரங்கள் wbjeeb.nic.in இல் கிடைக்கும்.
WBJEE தேர்வு 2020 பிப்ரவரி 2 ஆம் தேதி நடத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது.
ஒடிசா பிளஸ் டூ முடிவுகள் 2020
ஒடிசாவின் மேல்நிலைக் கல்வி கவுன்சில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இந்த வாரம் அல்லது ஆகஸ்ட் 15 க்குள் அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளது. CHSE ஒடிசா 12 ஆம் வகுப்பு முடிவுகள் orissaresults.nic.in மற்றும் chseodisha.nic.in ஆகிய வலைத்தளங்களில் வெளியிடப்படும்.
இந்த ஆண்டு, கோவிட் -19 காரணமாக ஒடிசா 12 ஆம் வகுப்பு 12 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க சிறப்பு மதிப்பீட்டு திட்டத்தை எடுக்க CHSE முடிவு செய்தது.
ALSO READ:: சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு; தமிழக மாணவர் தேசிய அளவில் 7ஆவது இடம்..!