10-ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவிப்பு...

மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், அனைத்து SSC மாணவர்களையும் எந்தவொரு தேர்வையும் நடத்தாமல் அடுத்த வகுப்பிற்கு உயர்த்த தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.

Last Updated : Jun 8, 2020, 08:43 PM IST
  • தெலுங்கானா அரசாங்கம் இன்று ஒரு உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
  • இந்த உத்தரவின்படி முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் "அவர்களின் உள் மதிப்பீட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி பெறுவர். பொது தேர்வு நடத்தப்படாது" என்று அறிவித்தார்.
10-ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவிப்பு... title=

மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், அனைத்து SSC மாணவர்களையும் எந்தவொரு தேர்வையும் நடத்தாமல் அடுத்த வகுப்பிற்கு உயர்த்த தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.

தெலுங்கானா அரசாங்கம் இன்று ஒரு உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த உத்தரவின்படி முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் "அவர்களின் உள் மதிப்பீட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி பெறுவர். பொது தேர்வு நடத்தப்படாது" என்று அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக அறிவித்தார்.

தெலங்கானாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு...

பட்டம் / முதுகலை தேர்வுகள் குறித்த முடிவும், எதிர்காலத்தின் நிலைமையின் அடிப்படையில் எடுக்கப்படும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தெலுங்கானா SSC தேர்வு 2020 ஜூன் 8 திங்கள் முதல் ஜூலை 5 வரை நடத்த திட்டமிடப்பட்டது, மேலும் மாநிலத்தில் கிட்டத்தட்ட 5.35 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு வர இருந்தனர்.

தகவல்கள் படி TSBIE தேர்வுகள் 2020 மார்ச் மாதத்திலிருந்து தொடங்கியிருந்தன, முதல் மற்றும் இரண்டாம் மொழிகளின் மூன்று தாள்கள் ஏற்கனவே மார்ச் 22 வரை நடத்தப்பட்டன, மீதமுள்ளவற்றை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் வாரியத்திற்கு அறிவுறுத்தியது. இதையடுத்து தேர்வுகளை நடத்துவதில் ஏற்படும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, இறுதியாக SSC தேர்வுகளை நடத்த வேண்டாம் என்று மாநில அரசு முடிவு செய்தது. 

மகாராஷ்டிரா, தெலுங்கானா, பஞ்சாப், மேற்கு வங்காளம் ஊரடங்கு நீட்டிக்க கோரிக்கை...

இந்நிலையில் தற்போது மாணவர்களின் தேர்சியானது பொதுதேர்வுக்கு மாறாக முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற தரங்களின் அடிப்படையில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC தேர்வுகள் குறித்து முடிவு செய்ய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று உயர் மட்ட கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர் இந்த முடிவை முதல்வர் அறிவித்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Trending News