9,494 காலிப் பணியிடங்கள் - TRB வெளியிட்ட அறிவிப்பு

2022 ஆம் ஆண்டு 9,494 காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தேசித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 23, 2022, 03:02 PM IST
  • காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது டி.ஆர்.பி
  • 9,494 காலிப் பணியிடங்களை நிரப்புகிறது ஆசிரியர் தேர்வு வாரியம்
  • ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும்
9,494 காலிப் பணியிடங்கள் - TRB வெளியிட்ட அறிவிப்பு title=

2022 ஆம் ஆண்டில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான ஆண்டு திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. மொத்தம் எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடத்த திட்டமிட்டிருப்பதாக டி.ஆர்.பி தெரிவித்துள்ளது.

ALSO READ | இனி இந்த துறைகளுக்கும் TNPSC தேர்வு - நிதியமைச்சர் அறிவிப்பு

இதேபோல் எஸ்.ஜி.டி மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 2ம் வாரத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த தேர்வின் மூலம் 4,989 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 167 காலிப் பணியிடங்களுக்கான SCERT விரிவுரையாளர்களுக்கான தேர்வும் ஜூன் 2ம் வாரத்தில் நடைபெற உள்ளது. அரசு கலைக்கல்லூரிகளில் சுமார் 1334 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் அறிவிப்பு வெளியாகும். 

ALSO READ | TNPSC: Group 4 புதிய பாடத்திட்டம் வெளியீடு

அரசுப் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 493 பணியிடங்களுக்கான தேர்வு, நவம்பர் 2வது வாரத்தில் நடைபெற உள்ளது. இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாகவுள்ள 104 உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வு டிசம்பர் 2வது வாரத்தில் நடைபெற உள்ளது. தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும்போது காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மாறுபடவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டில் மொத்தம் 9494 காலிப் பணியிடங்களை 6 தேர்வுகள் மூலம் டி.ஆர்.பி நிரப்ப உள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News