பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை: தமிழக பள்ளி கல்வி ஆணையர்

தற்போதைய ஆன்லைன் கல்வி முறை அதிக அளவில் பயன்படுத்தப்படும் நிலையில், எந்தவொரு பள்ளியும் குழந்தைகளை ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது என்று பள்ளி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 6, 2020, 04:45 PM IST
  • தற்போதைய ஆன்லைன் கல்வி முறை அதிக அளவில் பயன்படுத்தப்படும் நிலையில், எந்தவொரு பள்ளியும் குழந்தைகளை ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது என்று பள்ளி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.
  • பள்ளி மீண்டும் திறக்கப்பட்டதும், ஆன்லைன் அமர்வுகளில் கலந்து கொள்ள தவறிய மாணவர்களுக்கு பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என்று சிஜி தாமஸ் கூறினார்.
பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை: தமிழக பள்ளி கல்வி ஆணையர்  title=

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் 5 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசுப் பள்ளிகள் "கல்வி தொலைகாட்சி" மற்றும் முன்பே பதிவுசெய்யப்பட்ட பாடம் நடத்தும் வீடொயோக்கள் மூலம் பாடம் எடுத்து வந்த நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். 

சில மாணவர்களுக்கு மடிக்கணினிகள் அல்லது உயர் ரக மொபைல் போன்களை வாங்க முடியவில்லை என்பதால்,  மெய்நிகர் வகுப்புகளில் கலந்துகொள்வது கடினமாக உள்ளதாக, சில பெற்றோர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கவலை வெளியிட்டனர்.

இது தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, பள்ளி கல்வி ஆணையர் சீகி தாமஸ் வைத்யன், எந்தப் பள்ளியும் மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள நிர்பந்திக்க கூடாது என்று அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், மாணவர்களின் வருகையை ஊழியர்கள் கருத்தில் கொள்ளக்கூடாது, மேலும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கான மதிப்பீடுகளை நடத்துவதற்கும் தடை விதித்தன. ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க சிறப்பு கல்வி ஆலோசகரை நியமிக்க பள்ளிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மேலும், பள்ளி மீண்டும் திறக்கப்பட்டதும், ஆன்லைன் அமர்வுகளில் கலந்து கொள்ள தவறிய மாணவர்களுக்கு பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என்று சிஜி தாமஸ் கூறினார். 

முழு கட்டணத்தையும் செலுத்துமாறு பெற்றோரை கட்டாயப்படுத்தும் பள்ளிகளுக்கு எதிராக தனது துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையனும் கூறியுள்ளார்.

ALSO READ | NEP 2020: குடியரசுத் தலைவர், பிரதமர்  நாளை ஆளுநர்கள் மாநாட்டில் உரையாற்றுவார்கள்

 

Trending News