டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தமிழக அரசில் காலியாக இருக்கும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டு தேர்வுகளை அறிவித்து வருகிறது டிஎன்பிஎஸ்சி. அண்மையில் குரூப் 1 முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக குரூப் 2 முதல்நிலை தேர்வு மற்றும் குரூப் 4 தேர்வுகளை நடத்திய டிஎன்பிஎஸ்சி, இப்போது நில அளவையாளர், டிராப்ட்ஸ்மேன் எனப்படும் வரைவாளர் உள்ளிட்ட 1089 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. நில அளவையர் காலிப் பணியிடத்துக்கு 798 பேர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். வரவைாளர் பணிக்கு 236 பேரும், உதவி வரைவாளர் பணிக்கு 55 பேரும் என மொத்தம் 1089 பேர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ரிசல்ட் எப்போது? காத்திருக்கும் லட்சக்கணக்கானோர்!
கல்வித்தகுதி
நிலஅளவையர், வரைவாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்திருக்க வேண்டும் அல்லது சம்மந்தப்பட்ட தொழில் துறைகளில் (Surveyor, Draftsman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது அவசியம். உதவி வரைவாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் டிராப்மேன் ஷிப்(சிவில்) முடித்திருக்க வேண்டும்.
வயது விவரம்
நில அளவையாளர் மற்றும் வரைவாளர், உதவி வரைவாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி(ஓபிசிஎம்) மற்றும் பிசிஎம், கணவரை இழந்த பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு வயது வரம்பு கிடையாது
விண்ணப்பிக்கும் வழிமுறை
டிஎன்பிஎஸ்சி இப்போது வெளியிட்டிருக்கும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை கூடுதலாக தெரிந்து கொள்ள விரும்பினால் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிந்து கொண்டு, அங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி விண்ணப்பிக்க வேண்டும். ஒருமுறை பதிவு புதிதாக செய்வோர் 150 ரூபாய் செலுத்த வேண்டும். ஏற்கனவே ஒருமுறை பதிவு இருப்பவர்கள் தேர்வுக்கு 100 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
ஊதிய விவரம்
தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
மேலும் படிக்க | TNPSC குரூப் 4 தேர்வில் எதிர்பார்க்கப்படும் கட் ஆப்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ