பீகார் சட்டமன்றத் தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!

பீகார் சட்டசபை தேர்தல் முதல் கட்டமாக 71 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது..!

Last Updated : Oct 28, 2020, 07:24 AM IST
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..! title=

பீகார் சட்டசபை தேர்தல் முதல் கட்டமாக 71 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது..!

பீகாரில் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல்கள் (Bihar assembly election 2020) நடைபெறும் நிலையில், அதன் முதல்கட்ட ஓட்டுப் பதிவு 71 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. முதல் கட்டத்தில், 8 அமைச்சர்கள் உட்பட மொத்தம் 1064 வேட்பாளர்களின் தலைவிதி முடிவு செய்யப்படும். கொரோனா காலத்தில் வாக்காளர்களுக்கான தேர்தல் ஆணையத்தால் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. ஆளும் ஐக்கிய ஜனதாதளம் - BJP கூட்டணி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய மகா கட்பந்தன் அணி, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, அசாதுதின் ஓவைசி தலைமையிலான கூட்டணி என நான்கு முனைப் போட்டி நடைபெறுகிறது.

பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 2,3-வது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும். அனைத்து வாக்குகளும் நவம்பர் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் கட்டமாக இன்று 71 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க 1,000 பேர் முதல் 1,600 பேர் வரையிலான வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என அமைக்கப்பட்டுள்ளது. 

வாக்கு சாவடிகளில் தெர்மல் ஸ்கேனர், கையுறைகள், முக கவசங்கள், சோப் உள்ளிட்டவையும் வைக்கப்பட்டுள்ளன. இன்று வாக்குப் பதிவு நடைபெறும் சுமார் 71 தொகுதிகளில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ 35 இடங்களில் போட்டியிடுகிறது. BJP 29, ஆர்ஜேடி 42, காங்கிரஸ் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியானது மொத்தம் 41 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

ALSO READ | நாடு முழுவதும் நவம்பர் 30 வரை மீண்டும் ஊரடங்கு... எதற்கெல்லாம் அனுமதி?

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவின் மகளான 28 வயது திவ்யா பிரகாஷூம் இம்முறை தாராபூர் தொகுதியில் ஆர்ஜேடி வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ளார். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 6 அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர். முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 1066 பேர் வேட்பாளர்கள் இவர்களில் 114 பேர் பெண்கள்.

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரம்

முதல் கட்ட வாக்களிப்புடன், இரண்டாம் கட்டத்திற்கான பிரச்சாரமும் இன்று முதல் தீவிரமடையும். பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அனல் பறக்கும் பிரச்சாரத்தை செய்து வருக்கின்றனர். பிரதமர் மோடியின் முதல் பேரணி இன்று காலை 11 மணிக்கு தர்பங்காவில் நடைபெறுகிறது. இதன் பின்னர், அவர் முசாபர்பூர் மற்றும் பாட்னாவுக்குச் செல்வார். மேற்கு சம்பாரனில் காலை 11.45 மணிக்கு ராகுல் காந்தி, தர்பங்காவில் அதிகாலை 2.15 மணிக்கு தோஹ்பார் அணிவகுத்துச் செல்வார்கள். யோகி ஆதித்யநாத்தும் இன்று மூன்று பேரணிகளை நடத்துவார். அவரது முதல் பேரணி பீகாரில் உள்ள சிவானில் காலை 11:30 மணிக்கு நடைபெறும். யோகி ஆதித்யநாத் காலை 9 மணிக்கு லக்னோவிலிருந்து பாட்னாவுக்கு பறக்கவுள்ளார்.

மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்

பீகார் சட்டமன்றத்தின் 243 இடங்களுக்கான வாக்குப்பதிவு மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக, நவம்பர் 3 ஆம் தேதி 17 மாவட்டங்களில் 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும், மூன்றாம் கட்ட வாக்குகள் நவம்பர் 7 ஆம் தேதியும், அதே நேரத்தில் நவம்பர் 10 ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறும்.

Trending News