Tamil Nadu Latest News Updates, Seeman: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மதுரை கே.கே நகரைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, "தந்தை பெரியார் பற்றி சீமான் கூறும் கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில் உள்ளது. சீமான் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.. எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜன. 20ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அண்ணா நகர் காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சீமான் மீது 60க்கும் மேற்பட்டோர் புகார்கள்
இதனால் சீமான் கைதாவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சீமான் பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கூறி பல்வேறு தரப்பினர் தமிழ்நாடு முழுவதும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும், சீமான் மீது தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட புகார்கள் வழங்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் கடலூரில் சீமான் அளித்த பேட்டியில் அவரிடம், தவெக தலைவர் விஜய்யை முதலில் வரவேற்று, தற்போது விமர்சிக்கும் காரணம் என்ன என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான், அரசியலில் அண்ணன், தம்பி என பேச்சுக்கு இடம் கிடையாது என்றும் கொள்கைதான் முக்கியம் என்றும் பேசினார். தொடர்ந்து பேசிய சீமான்,"பெரியாரை அரசியல் வழிக்காட்டி என விஜய் கூறுகிறார். பெரியார் எந்த வகையில் விஜய்க்கு அரசியல் வழிகாட்டி என நாம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
சீமான் பேசியது என்ன?
தமிழை சனியன், குப்பை, காட்டுமிராண்டி மொழி, உங்க தமிழ்த்தாய்க்கு என்ன கொம்பா இருக்கிறது என பெரியார் கேட்கிறார். தமிழ்த்தாய் 3000 ஆண்டுகளாக உங்களைப் படிக்க வைத்தாளா என்று கேட்கிறார், தமிழ்த்தாய் படிக்க வைக்காமலா திருக்குறள், சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் ஆகிய உயரிய படைப்புகள் வந்தது.
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார், அப்படியென்றால் எந்த மொழியில் எழுதினார் அவர். என்னுடைய தாய்மொழியை ஒன்றுமில்லை என்று சொல்லும்போது, பிறகு என்ன சமூக மாற்றம், சீர்திருத்தம், அரசியல் இருக்கிறது. ஆகச் சிறந்த உலக வாழ்வியல் நெறி திருக்குறளை மலம் என்று சொன்னவர் அவர். அவருக்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் என்ன சம்பந்தம்.
சீமான் பேச்சு - கண்டனங்களும், ஆதரவும்
பெண்ணுரிமைக்காக அவர் அரசியல் வழிகாட்டியா... 'உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டு மகிழச்சியாக இரு' என பெரியார் சொன்னார். இது பெண்ணிய உரிமையா?" என கேள்வி எழுப்பினார். சீமானின் இந்த பேச்சே தற்போது தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு ஆதாரம் கிடைத்தால் கொடுக்கும்படி சீமானிடம் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சீமானின் பேச்சுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று கண்டனம் தெரிவித்திருந்தார். பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். இருப்பினும், அதிமுக, தவெக தரப்பில் எவ்வித கண்டனமோ, ஆதரவோ வரவில்லை. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மட்டும் சீமானுக்கு ஆதரவாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கலைஞர் உரிமைத் தொகை குட் நியூஸ்! விண்ணப்பிப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ