3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் -ஆசம் கான்!

ராம்பூர் மக்களவை தொகுதியில் தான் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றால், நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறவில்லை என அர்த்தம் என்று சமாஜ்வாதி தலைவர் ஆசம் கான் தெரிவித்துள்ளார்!

Last Updated : May 22, 2019, 10:21 AM IST
3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் -ஆசம் கான்! title=

ராம்பூர் மக்களவை தொகுதியில் தான் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றால், நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறவில்லை என அர்த்தம் என்று சமாஜ்வாதி தலைவர் ஆசம் கான் தெரிவித்துள்ளார்!

உத்திர பிரதேச மாநிலம் உட்பட பல்வேறு மாநிலங்களில் வாக்குபதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ஆசம் கான் தற்போது இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ஆசம் கான் மட்டுமல்ல, முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைமையும் உத்திர பிரதேச மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெருமளவு முறைகேடு நிகழ்ந்திருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

எனினும் எதிர்கட்சிகளின் இந்த புகாரினை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைப்பெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் மீது தேர்தல் ஆணையம் பாதுகாப்பினை அதிகரித்துள்ளது. எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.

மேலும் வாக்குபதிவு இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகளுக்கு உடனடி தீர்வு காண 24 மணி நேர கண்கானிப்பு மையத்தினையும், அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது ஆசம் கான் வெளியிட்டுள்ள கருத்து பெரும் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி தலைவர் ஆசாம் கான் அவர்கள்., பாஜக-வின் ஜெயப்பிரதா-வை எதிர்கொள்கின்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட காரசார விவாதங்கள் விவாத பொருளானது குறிப்பிடத்தக்கது.

Trending News