ஆந்திர முதல்வராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு ராகுல் காந்தி வாழ்த்து!!

ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற YSR காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ராகுல் காந்தி வாழ்த்து!!

Last Updated : May 30, 2019, 03:22 PM IST
ஆந்திர முதல்வராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு ராகுல் காந்தி வாழ்த்து!!

ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற YSR காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ராகுல் காந்தி வாழ்த்து!!

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி 9 ஆண்டுகளில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார். இதைத் தொடர்ந்து விஜயவாடாவில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி நண்பகல் 12 மணி 23 நிமிடங்களுக்கு பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் நரசிம்மன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அமைச்சர்கள் அனைவரும் ஜூன் 6-ஆம் தேதி பதவியேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற YSR காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களின் பாராட்டை தெருவுத்து வருகின்றனர். 

இதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஜெகன் மோகன் ரெட்டிக்கு ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆந்திர முதல் மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்; அமைச்சர்களின் புதிய குழு மற்றும் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். 

 

More Stories

Trending News