அருண் ஜெட்லியின் சிறுநீரகப் அறுவை சிகிச்சை வெற்றி!!

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது!

Last Updated : May 14, 2018, 04:16 PM IST
அருண் ஜெட்லியின் சிறுநீரகப் அறுவை சிகிச்சை வெற்றி!! title=

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடந்த சில தினங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு சிறுநீரகப்பை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இந்தச் சூழலில் கடந்த மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து., அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தற்போது மேற்கொள்ளப்பட்டது. பிரபல சிறுநீரக மருத்துவ நிபுணர் சந்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 

இந்நிலையில், இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News