தற்போது, தீபாவளி முடிந்துவிட்ட நிலையில், சென்னை, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகள் காற்று மாசுபாடுகளால் நிரம்பியுள்ளது. தடைகளை தாண்டியும், நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்தன.
என்சிஆர் வெளியிட்ட தகவலின்படி, தீபாவளிக்குப் பிந்தைய டெல்லி காற்று மாசுபாட்டிற்கு மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளை விட நிலைமை ஒப்பீட்டளவில், இந்தாண்டு குறைந்திருந்தாலும், காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.
காற்று மாசுப்பாட்டை அளவிட்டு அதற்கென காற்றின் தரக் குறியீடு (AQI) வழங்கப்படும். அதன்படி 0-50க்கும் இடைப்பட்ட AQI 'மிகவும் ஆரோக்கியமானது', 51 மற்றும் 100 'திருப்திகரமானது', 101 மற்றும் 200 'மிதமானது', 201 மற்றும் 300 'மோசமானது', 301 மற்றும் 400 'மிக மோசமானது' மற்றும் 401 மற்றும் 500 'கடுமையானது' எனக் கருதப்படுகிறது.
இன்று காலை 8 மணியளவில் தலைநகர் டெல்லியின் காற்றின் தரக் குறியீடு (AQI) 326 ஆக இருந்தது. அண்டை நகரங்களான காசியாபாத் (285), நொய்டா (320), கிரேட்டர் நொய்டா (294), குருகிராம் (315) மற்றும் ஃபரிதாபாத் (310) ஆகியவை 'மோசமான' முதல் 'மிகவும் மோசமான' காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளன.
மற்ற நகரங்கள் தலைப்புச் செய்திகளை உருவாக்கவில்லை என்றாலும், பல மாநிலங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. ஒரு நாளைக்கு 16 சிகரெட் புடித்தால் எவ்வளவு நச்சுப்புகையை சுவாசித்து இருப்பமோ, அந்தளவிற்கு சென்னைவாசிகள் நேற்று நச்சுப்புகையை சுவாசித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இதனால், உங்கள் நுரையீரலும் சற்று பாதிக்கப்படலாம். எனவே, நுரையீரல் ஆரோக்கியத்திற்கான சில யோகா ஆசனங்களை இங்கு காணலாம். நீங்கள் ஏதும் மருத்துவ சிகிச்சையில் இருந்துவந்தால், இந்த யோகாசன முறை குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்தோசனை செய்து அதனை மேற்கொள்ளுங்கள்.
1. தனுராசனா
இது உங்கள் மார்புப் பகுதியைத் திறக்க உதவுவதால், நீங்கள் நன்றாக சுவாசிக்க உதவுகிறது.
எப்படி செய்வது
உங்கள் வயிறு தரையை அழுத்திக்கொள்ளும்படி படுத்துக்கொள்ளுங்கள். உங்கள் கால்கள் சற்று விலக்கிவைத்து, உங்கள் கைகள் பக்கவாட்டில் இருக்க வேண்டும். உங்கள் முழங்கால்களை மடிக்கி, உங்கள் கணுக்கால்களை கைகளால் பிடித்துக் கொள்ளுங்கள்.
மூச்சை உள்ளிழுத்து, உங்கள் மார்பை தரையில் இருந்து மெதுவாக உயர்த்தவும். அப்போது, உங்கள் கைகள் மற்றும் தொடைகளில் நீட்சியை உணருங்கள். சுமார் 15 விநாடிகள் இந்த நிலையில் இருங்கள். பின்னர் மூச்சை வெளியே இழுத்துவிட்டு, மெதுவாக உங்கள் மார்பையும் காலையும் தரையில் கொண்டு வந்து, உங்கள் கணுக்கால்களை விடுங்கள். உங்கள் கைகளை பக்கத்தில் வைத்து ஓய்வெடுக்கவும். 3-4 செட்களை செய்யவும்.
2. வயிற்றின் மூலம் சுவாசம்
இந்த யோகா ஆசனம் ஆழ்ந்த சுவாசத்தை ஊக்குவிக்கிறது. இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும் மீட்டமைக்கவும் உதவுகிறது.
எப்படி செய்வது
உங்கள் முழங்கால்களை வளைத்து வைத்து, உங்கள் முதுகு தரையில் அழுத்தும்படி படுத்துக்கொள்ளுங்கள். இரண்டு கால்களும் விலகி இருக்க வேண்டும்ஸ ஆனால் உங்கள் முழங்கால்கள் ஒன்றையொன்று தொட வேண்டும். உங்கள் வலது உள்ளங்கையை எடுத்து உங்கள் வயிற்றில் வைக்கவும். மூச்சை உள்ளிழுக்கவும்; ஆழ்ந்த மூச்சை எடுத்துவிடுங்கள். உங்கள் வயிறு உயர்வதிலும், உள்வாங்குவதிலும் கவனம் செலுத்துங்கள். சுமார் 10 சுற்றுகளுக்கு மீண்டும் மீண்டும் செய்யுங்கள்.
3. புஜங்காசனம்
இந்த ஆசனம், நமது நுரையீரலை நீட்டி நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எப்படி செய்வது
உங்கள் வயிறு தரையில் அழுத்தும்படி படுத்து, உங்கள் கால்களை நேராக வைக்கவும். உங்கள் முன்கைகளை தரையில் செங்குத்தாக வைக்கவேண்டும். அதாவது உங்கள் கையை கடைசி விலா எலும்புக்கு அருகில் தரையில் இருபுறமும் வைக்கவும். பின்னர் உங்கள் உடலை உயர்த்த உங்கள் கைகளை நன்கு அழுத்தவும். மேலே நேராக பார்த்து மூச்சை இழுத்துவிடுங்கள். 15-20 வினாடிகள் நிலையை வைத்திருங்கள்.
4. மத்ஸ்ய ஆசனம்
உங்கள் மார்பை விரிவுபடுத்தும் இந்த ஆசனம் சுவாச பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. இது நுரையீரலை காற்றால் நிரப்புகிறது.
எப்படி செய்வது
உங்கள் முதுகு தரையை அழுத்தும்படி படுத்துக்கொள்ளுங்கள். உங்கள் கைகளை உங்கள் உடலின் கீழ் வையுங்கள். உங்கள் தோள்பட்டைகளின் கீழ் ஒரு தலையணை அல்லது சுருட்டப்பட்ட யோகா பாயை வைத்துக்கொள்ளவும். மூச்சை உள்ளிழுக்கும்போது, உங்கள் தலையையும் மார்பையும் மேலே உயர்த்தவும். மார்பு உயரமாக இருப்பதால், உங்கள் தலையைத் தாழ்த்தி, தலையின் உச்சி தரையைத் தொடவும். மூச்சை உள்ளிழுத்து ஆழமாக வெளிவிடவும்.
5. நாடி சோதன பிராணயாமா (மாற்று நாசி சுவாசம்)
இந்த பிராணயாமா உங்கள் மூக்கின் இருபுறமும் உங்கள் சுவாச ஓட்டத்தை சமநிலைப்படுத்துகிறது.
எப்படி செய்வது
வலது கையை எடுத்து கட்டை விரலால் வலது நாசியை மூடவும். இடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுக்கவும். பின்னர் உங்கள் மோதிர விரலைப் பயன்படுத்தி, இடது நாசியை மூடி, வலது நாசி வழியாக மூச்சை வெளியே விடவும். அடுத்து, வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுக்கவும். பிறகு வலது நாசியை மூடி இடது நாசியில் இருந்து மூச்சை வெளியே விடவும். இவை அனைத்தும் ஒரு சுற்று. 10-15 முறை இந்த சுற்றை செய்யவும் மற்றும் மெதுவாக சுவாசிக்கவும்.
மேலும் படிக்க | சூரிய கிரகணத்தின்போது, இதைச் செய்தால் மகாபாவம்! கண்டிப்பாக தவிர்க்கவும்
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுத் தகவலை அடிப்படையாகக் கொண்டது மற்றும் மருத்துவரின் ஆலோசனை அல்லது யோகா நிபுணரின் ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. உடற்பயிற்சி முறையைத் தொடங்கும் முன் நிபுணர்களைக் கலந்தாலோசிக்கவும். Zee Tamil News இதை உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ