Pongal Gift + Rs 1000 Cash: தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த நிலையில ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் மற்றும் ரொக்கப் பணமாக ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு சார்ந்து அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் 2025 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடக்கூடிய வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
இதன்மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினரும் பயன்பெறுவார்கள். இதனால் தமிழக அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றை சேர்த்து வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான டோக்கன்கள் 2025 ஜனவரி மூன்றாம் தேதி முதல் கொடுக்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கனில் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். டோக்கன் பெற்றுக்கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை (ஜனவரி 8) சென்னை சைதாப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 9 முதல் ஜனவரி 13 வரை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்து ரூ.1000 பணம் இடம்பெறவில்லை. இந்த ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் வழங்காததற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணி கட்சியினரும் அதிருப்தியை தெரிவித்தனர். இதனை அடுத்து பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் வழங்குவது சார்ந்து நிதித்துறை செயலர் உதயசந்திரன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. எனவே பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 1000 ரூபாய் பணம் கிடைக்குமா? காத்திருப்போம்.
மேலும் படிக்க - இனி 1 லட்சம் இல்லை; 2 லட்சம்! மக்களுக்காக தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
மேலும் படிக்க - கலைஞர் உரிமைத் தொகை குட்நியூஸ் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ