Budget 2025: இனி Form 16A தேவைப்படாதா? மாற்றம் காணும் TDS, TCS: நிதி அமைச்சர் தரவுள்ள சர்ப்ரைஸ் என்ன?

Budget 2025: சில குறிப்பிட்ட அம்சங்களில் பலதரப்பட்ட துறைகள் ஒருமித்த எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளன. அவற்றில் இந்தியாவில் வரி முறையை எளிமையாக்குவதும் ஒன்று.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 7, 2025, 04:04 PM IST
  • TDS மற்றும் TCS பற்றிய பரிந்துரைகள்.
  • படிவம் 16A தேவை இல்லை என கூறும் நிபுணகள்.
  • இரட்டை வரிவிதிப்பு வழக்குகள் குறையும்.
Budget 2025: இனி Form 16A தேவைப்படாதா? மாற்றம் காணும் TDS, TCS: நிதி அமைச்சர் தரவுள்ள சர்ப்ரைஸ் என்ன? title=

Union Budget 2025: பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பட்ஜெட் குறித்து வரி செலுத்துவோர், நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் என பல தரப்பினருக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன.

Budget 2025 Expectations: எளிமையான வரிமுறை

சில குறிப்பிட்ட அம்சங்களில் பலதரப்பட்ட துறைகள் ஒருமித்த எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளன. அவற்றில் இந்தியாவில் வரி முறையை எளிமையாக்குவதும் ஒன்று. வரி முறையை எளிமையாக்குவதற்கான வழிகள் தேவை என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) உள்ளிட்ட தொழில்துறை தலைவர்கள், வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான வரி இணக்கத்தை எளிதாக்க வேண்டும் என்றும், விதிமுறைகளை குறைக்க வேண்டும் என்றும் கோரி, இதற்கான தங்கள் கோரிக்கைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

TDS மற்றும் TCS பற்றிய பரிந்துரைகள்

TDS மற்றும் TCS அமைப்பை எளிதாக்குவது FICCI இன் முக்கிய பரிந்துரைகளில் ஒன்றாக உள்ளது. பல அடுக்குகளாக உள்ள டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் விகிதங்களை இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாகக் குறைப்பதற்கான பரிந்துரையில் இந்த திட்டத்தில் அடங்கும். இது வரி வகைப்பாடுகள் மற்றும் சர்ச்சைகள் மீதான குழப்பத்தைக் குறைக்க உதவும் என நிதி வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

மேலும் படிக்க | SIP + SWP: பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் இல்லை... நல்ல மாதம் வருமானம் தரும் பரஸ்பர நிதியம்

Form 16A: படிவம் 16A தேவை இல்லை என கூறும் நிபுணகள்

படிவம் 16A தேவை இல்லை என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. தேவையான டிடிஎஸ் விவரங்கள் ஏற்கனவே படிவம் 26ஏஎஸ் மற்றும் வருடாந்திர தகவல் அறிக்கை (ஏஐஎஸ்) ஆகியவற்றில் இருக்கின்றன. ஆகையால் படிவம் 16ஏவை நீக்குமாறு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்த நடவடிக்கை வணிகங்களுக்கும் தனிநபர்களுக்கும் இணக்கத்தை எளிதாக்கும் என நம்பப்படுகின்றது.

Double Taxation: இரட்டை வரிவிதிப்பு வழக்குகள் குறையும்

- வரிக் கட்டமைப்பை எளிதாக்குவதற்கு அரசாங்கம் ஏற்கனவே சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 
- 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், 50,000 ரூபாய்க்கு மேலான வாடகைக்கு TDS விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டது. 
- மேலும், ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான சொத்துக்களை வாங்குபவர்கள், விற்பனையாளர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், இந்த வரம்பிற்கு மேல் உள்ள மதிப்பில் மட்டுமே TDS கழிக்க வேண்டும்.
- இதனால் செயல்முறை எளிதாகும்.
- மற்றொரு மாற்றம், மைனர் குழந்தைகளின் வருமானத்தில் இருந்து டிசிஎஸ் பெறுவதற்கு பெற்றோரை அனுமதித்தது.
- இது அமைப்பை குடும்பங்களுக்கு ஏற்ற செயல்முறையாக மாற்றியது.

அக்டோபர் 2024 முதல், சம்பளத்தின் மீதான வரியைக் கணக்கிடும் போது, ​​சம்பளம் அல்லாத வருமானத்தில் TDS/TCS கழிப்பை முதலாளிகள் / நிறுவனங்காள் பரிசீலிக்க வேண்டும். இதன் மூலம் இரட்டை வரிவிதிப்பு வழக்குகள் குறையும்.

இந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் TDS மற்றும் TCS அமைப்பை எளிதாக்கி, வரி அடுக்குகளையும் குறைத்தால், வரி செலுத்துவோருக்கும், இது சார்ந்த அமைப்புகளுக்கும் இது குழப்பமற்ற தெளிவான சூழலை உருவாக்கும் என நம்பப்படுகின்றது.

மேலும் படிக்க | Budget 2025: ஜிஎஸ்டி குறைப்பு, வரி தள்ளுபடி.... காப்பீட்டுத் துறையில் காத்திருக்கும் குட் நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News