விசித்திரம்: பெண்கள் குரலை மட்டும் கேட்கும் வினோத நோய்!

சீன நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பெண்கள் குரல்களை மட்டும் கேட்கும் வினோத காது கேளாமை நோய்க்கு ஆளாகியுள்ளார்!

Updated: Jan 11, 2019, 12:53 PM IST
விசித்திரம்: பெண்கள் குரலை மட்டும் கேட்கும் வினோத நோய்!
Representational Image

சீன நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பெண்கள் குரல்களை மட்டும் கேட்கும் வினோத காது கேளாமை நோய்க்கு ஆளாகியுள்ளார்!

நாளுக்கு நாள் பல புதுவித நோய்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் சீனவை சேர்ந்த பெண்மனி ஒருவர் அதிக அதிர்வெண் கொண்ட குரல்களை மட்டும் கேட்கும் வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது. 

Reverse-Slope Hearing Loss (RSHL) என அறியப்படும் இந்த வகை நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் அதிக அதிர்வெண் கொண்ட ஒலிகளை மட்டுமே கேட்க முடியும். அந்த வகையில் பெண்கள் குரல்களை தவிர, அதிக அதிர்வெண் கொண்ட ஆண்களின் குரல்களை மட்டுமே கேட்க இயலும். அதன்படி., கைப்பேசிகளில் வரும் ஒலிகளை கூட அவர்களால் கேட்கமுடியாது.

இந்த அரிய வகை நோயில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள பெண் Chen என அடையாளம் காணப்பட்டுள்ளார். சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியை சேர்ந்த இவர் ஒருநாள் விழித்தெழுந்த போது தனது காதலர் குரல் உள்பட மற்ற ஆண்களின் குரல்களையும் கேட்கும் திறணை இழ்ந்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்த Qianpu Hospital(ENT) மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு Chen-க்கு RSHL பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நோய் குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில்., சுமார் 13,000 நோயாளிகளில் ஒருவருக்கு இந்த நோய் ஏற்படும் எனவும், அதிக மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள நபர்களையே இந்த நோய் பெருமளவில் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த உயர் அதிர்வெண் இழப்பு குறைப்பாட்டு நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக பெரும்பாலான சுகாதார பராமரிப்பு நிபுணர்கள் பயிற்றுவிக்கப்படவில்லை. இதற்கு சிகிச்சை அளிக்கும் முறையும் எளிதானது அல்ல, எனினும் இந்த நோயில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மருத்துவர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.