ஆண்களின் பாலியல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் அற்புதமான அபூர்வமான அத்திப்பழம்

Fruits For Health: பெண்களின் கருப்பையை வலுவாக்கும் அத்திப்பழம் ஆண்களின் பாலியல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் அற்புதமான அபூர்வமான சக்தி கொண்டது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 5, 2022, 03:24 PM IST
  • அத்திப்பழத்தின் அபூர்வ நன்மைகள்.
  • அத்திப்பழத்தை இப்படி சாப்பிட்டால் ஆண்களுக்கு நல்லது
  • பாலியல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் அத்திப்பழம்
ஆண்களின் பாலியல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் அற்புதமான அபூர்வமான அத்திப்பழம் title=

துத்தநாகம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு போன்ற தாதுக்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் அத்தி மரம் மிகவும் சக்தி வாய்ந்தது என்றால், அந்த அபூர்வ மரம் தரும் ஒவ்வொரு பொருளும் மிகவும் அருமையான பலன்களை கொடுப்பது ஆகும். பெண்கள் கருத்தரித்த நாலாவது மாதம் அத்தி மரத்தின் பாலை எடுத்து அடிவயிற்றில் தடவிக்கொண்டால் கரு கலையும் வாய்ப்பே இல்லை என்பது பண்டைய காலம் முதல் தொடரும் நம்பிக்கை. கர்ப்பம் தரிக்கவும், கருவை வலுவாக்கவும் பெண்களுக்கு அத்தி பயன்படுகிறது என்றால், ஆண்களுக்கு அத்திப் பழம் என்பது சர்வரோக நிவாரணியாக பயன்படுகிறது. 

ஆண்களின் பாலியல் செயலிழப்பு பிரச்சினையை அகற்றுவதில் நன்மை பயக்கும் அத்திப்பழங்களை உட்கொள்வதன் மூலம், மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மைக் குறைவை சீர் செய்யலாம். அத்திப் பழத்தை வெறும் பழம் என்று சொல்வதைவிட, அது மருத்துவ பயன்களை கொண்ட ஆரோக்கியப் பழம் என்று சொல்லலாம். உடல் பலவீனம் இருப்பவர்கள், தினமும் அத்திப்பழத்தை உட்கொண்டால், சோர்வும் பலவீனமும் அகலும். 

உண்மையில் நாம் அத்திப்பழம் என்று நினைப்புது அத்தி மரத்தின் பூவேயாகும். அத்திமரத்தில் உள்ள விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் தோற்றத்தை தருகின்றது. உயரமான மரங்களில் காய்க்க்கும் இந்த பழம் சீமை அத்தி , நாட்டு அத்தி என இரு வகைப்படும். 

மேலும் படிக்க | High Cholesterol பிரச்சனையா? இஞ்சியை இப்படி பயன்படுத்தி பாருங்க, உடனடி தீர்வு கிடைக்கும்

அத்திப்பழம்  நார்ச்சத்து நிறைந்த பழம் ஆகும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு அத்திப்பழம் அருமருந்தாகும். அத்திப் பழத்தை உலரவைத்து வெகுநாட்கள் பயன்படுத்தலாம். உணவை விரைவில் செரிமானம் செய்து, சுறுசுறுப்பை தரும் அத்திப் பழக் பித்தத்தைப் போக்கும் பழம்.

தினசரி 2 அத்திப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை நீக்க தினமும் அத்திப்பழத்தை சாப்பிடலாம். சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் உதவுகிறது.

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்கும் புளி

துத்தநாகம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு போன்ற தாதுக்கள் அத்திப்பழத்தில் (Healthy Fruit) காணப்படுகின்றன. இது தவிர, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்தும் அத்திப்பழத்தில் ஏராளமாக உள்ளது. இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்கள், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட், நார்சத்து மற்றும் போதுமான கலோரிகளும் இதில் உள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு நன்மை பயப்பவை. 

ஊறவைத்த 3 அத்திப்பழங்களை தினமும் சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொண்டால் பல நோய்கள் விலகும். அத்திப்பழத்தை பச்சையாகவும், சமைத்தும் சாப்பிடலாம். அத்திப்பழத்தை இரவில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம், அதேபோல் இதை இரவு தூங்கும் முன் பாலுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கோவிட்-19 தடுப்பூசியால் மரணம்! இறப்புக்கும் தடுப்பூசிக்கும் இடையில் தொடர்பு உறுதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News