ஆண்மை குறைபாட்டிற்கு வழிவகுக்கும் உணவுகள்! தப்பித்தவறி கூட தொடாதீங்க..

Erectile Dysfunction: பலர், ஆண்மை குறைபாட்டினால் அவதிப்படுவர். அவர்கள், சில உணவுகளை தவிர்ப்பது நலம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

Written by - Yuvashree | Last Updated : Feb 2, 2024, 08:19 PM IST
  • சில உணவுகள் ஆண்மை குறைபாடுக்கு வழிவகுக்கும்.
  • இந்தியாவில் 25 சதவிகிதம் பேர் இதனால் அவதி-தரவில் உள்ள தகவல்.
  • இதை தவிர்க்க, சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஆண்மை குறைபாட்டிற்கு வழிவகுக்கும் உணவுகள்! தப்பித்தவறி கூட தொடாதீங்க.. title=

Erectile Dysfunction Prevention Causes: ஆண்மை குறைப்பட்டினை, Erectile dysfunction என குறிப்பிடுவர். இந்த பாதிப்பு, பல்வேறு காரணங்களுக்காக ஏற்படலாம். ஆனால், பெரும்பாலான சம்யங்களில் இது நாம் சாப்பிடும் உணவுகளுடன் தொடர்புடையதாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் பலர் சாப்பிடும் உணவுகளில் தரமும், சத்துக்களும் குறைந்தே இருக்கின்றன. அந்த சமயத்தில், உடலுக்கு உபாதை தரும் உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. 

இந்தியாவை பொருத்தவரை, 15.77 சதவிகித ஆண்கள் ஆண்மை குறைப்பாட்டினால் அவதிப்படுவதாகவும், செக்ஸ் ஆற்றல் குறைப்பட்டால் அவதிப்படுவதாகவும் ஒரு தரவு கூறுகிறது. அதிலும், 19 வயதிற்கு கீழ் உள்ளவர்களில் 1 சதவிகிதம் பேருக்கு இந்த பிரச்சனை வருவதாகவும், 75 வயதாகும் போது இந்த குறைப்பாடு 25 சதவிகதமாக மாறப்படுவதாகவும் அந்த தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தவிர்க்க, நாம் உணவு பழக்கத்தையும், வாழ்க்கை முறையையும் நிறையவே மாற்ற வேண்டியுள்ளது. இதில் சிக்காமல் இருக்க, நாம் சில உணவுகளிடமிருந்து தள்ளியிருப்பது நல்லது என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அவை என்னென்ன உணவுகள் என இங்கு பார்ப்போம். 

பொரித்த உணவுகள்

பொரித்த உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாகவே உள்ளது. இதில், டீப் ஃப்ரை செய்யப்பட்ட உணவுகள் இன்னும் உடலுக்கு கேடு விளைவிப்பவையாக உள்ளன. ஃப்ரென்ஞ் ஃப்ரைஸ், சிக்கென் ஸ்டூ, எக் ரோல்ஸ், பொறித்த சிக்கன், ஹாட் டாக்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் உள்ளிட்ட நன்கு எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

மேலும் படிக்க | தயிர் சைவமா இல்லை அசைவமா? ’முட்டை’ மார்க் வாங்குபவர்களுக்கு முக்கியமான தகவல்!

சிவப்பு இறைச்சி:

அதிகம் கொழுப்பு இருக்கும் இறைச்சிகள், கிட்டத்தட்ட துரித உணவுகளுக்கு சமம் என கூறப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள், கோழி அல்லாது எந்த உணவும் அதிக கொழுப்புள்ளவையாம். பீஃப், ஆட்டுக்கறி, போர்க், மட்டன், வெள்ளாட்டுக்கறி உள்ளிட்டவை நமது கொழுப்பின் அளவை அதிகரிக்குமாம். இதனால் உடலில் ரத்த ஓட்டம் சரியாக இருக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆண்களை பொறுத்தவரை, அவர்களின் பிறப்புறுப்பிற்கு ரத்த ஓட்டம் செல்வதையும் அதிக கொழுப்பு தடுக்குமாம். எனவே, இந்த இறைச்சி உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நலம். 

சோடியம் அதிகம் உள்ள உணவுகள்:

அதிகளவு உப்புச்சத்து கலந்த உணவுகள், அதிக ரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும் என ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, ஆண்மை குறைப்பாட்டுடன் தொடர்புடையதாக உள்ளதாக பிற மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 70சதவிகிதத்திற்கு அதிகமாக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளில்தான் உள்ளதாக கூறப்படுகிறது. பர்கர்,டாக்கோஸ், பிரெட், பீட்ஸா, சூப் உள்ளிட்டவற்றில் சோடிய சத்துகள் அதிகமாக இருக்கலாம். 

மது:

மது பழக்கத்திற்கும் ஆண்மை குறைப்பாட்டிற்கும் பல தொடர்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஒன்று முதல் இரண்டு கிளாஸ் மது கூட இந்த குறைப்பாட்டை பெரிதாக ஆக்கிவிடுமாம். ஆகையால், இந்த குறைப்பாட்டை தவிர்க்க மது பழக்கத்தில் இருந்து தள்ளியிருத்தல் நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | Weight Loss: வெயிட் லாஸ் பண்ணனுமா? தினமும் ஒரு ஸ்பூன் ‘இதை’ சாப்பிடுங்க!

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! ​

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News