இஞ்சி டீ பற்றி தெரியும்... அதென்ன மஞ்சள் டீ?

மஞ்சள் டீ குடிச்சிருக்கீங்களா?.... ஒருமுறை குடிச்சா அப்புறம் விடவேமாட்டீங்க பாஸ்!!

Updated: Jul 25, 2018, 07:20 PM IST
இஞ்சி டீ பற்றி தெரியும்... அதென்ன மஞ்சள் டீ?

மஞ்சள் டீ குடிச்சிருக்கீங்களா?.... ஒருமுறை குடிச்சா அப்புறம் விடவேமாட்டீங்க பாஸ்!!

உடல் எடையை குறைப்பதை ஒரு ஜாலியான அனுபவமாக்க, ஊட்டச்சத்து மிக்க உணவை உண்பதும், உடற்பயிற்சியும் தான் சிறந்த வழி. இன்னும் சொல்லபோனால், சரிவிகித உணவும் வேர்க்க விறுவிறுக்க செய்யும் உடற்பயிற்சியும் தான் உங்களுக்கு தேவை. ஆனாலும் இந்த சூப்பரான இஞ்சி மற்றும் மஞ்சள் டீ போட்டு சுவைத்து தான் பாருங்களேன்.

இஞ்சி, மஞ்சள் டீ உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், விரைவாக உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இஞ்சியும், மஞ்சளும் நமது சமையல் அறையில் முக்கிய அங்கம் வகிப்பதுடன், அதன் இயற்கையான மருத்துவ குணங்களால் பெரிதும் போற்றப்படுகிறது. இயற்கை எப்போதும் தவறாகாது. இஞ்சியும், மஞ்சளும் சாதாரண மளிகைக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை, அப்படியே கிழங்கு/வேரகவும், பொடியாகவும் கிடைக்கிறது.

மஞ்சள் டீ தயாரிக்கும் முறை: 

2 தேக்கரண்டி - மஞ்சள் பொடி (10 கிராம்) 

2 தேக்கரண்டி - இஞ்சி (30 கிராம்) 

1 ஸ்பூன் - தேன் (25 கிராம்) 

2 கப் - தண்ணீர் (500 மிலி) 

தயாரிக்கும் முறை:-  இஞ்சியை தோல் நீக்கி, சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். தண்ணீரை சுட வைத்து அதில் அந்த இஞ்சியை சேர்க்கவும். 5 முதல் 10 நிமிடம் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, நன்றாக கலக்கி வைத்துகொள்ளவும். 

இந்த திரவத்தை ஒரு கப்-ல் இட்டு மஞ்சள் பொடி சேர்க்கவும். அத்துடன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். உங்களுக்கு எலுமிச்சை சுவைபிடிக்கும் என்றால் இதில் சில துளிகள் எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.

ஒரு நாளின் எந்த நேரத்திலும், நீங்கள் வெறும் வயிற்றில் இந்த டீயை குடிப்பது நல்லது. நீங்கள் உடற்பயிற்சியின் போது குடிக்கலாம். இந்த டீயை, குடிநீரை போல், ஏன் அதைவிட அதிகமாகவே குடிக்கலாம். இதனால் தேவையான நீர்சத்து உடலுக்கு கிடைப்பதுடன், உடலுக்கு சக்தி மற்றும் பலமும் கிடைக்கிறது. உடல் எடையும் குறையும்.

இதன் பலன்கள்: 

> மஞ்சள் புதிதாக கொழுப்பு செல்கள் உருவாவதை தடுத்து உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. மேலும், எல்.டி.ல் எனப்படும் கெட்ட கொழுப்பையும், ட்ரை கிளேசிரைட்களையும் குறைக்க உதவுகிறது.

> மஞ்சள் டீ வயிற்றில் சுரக்கும் பித்த நீர் அளவை அதிகரிக்க உதவும். பித்த நீர் என்பது கொழுப்பை கரைக்கவல்ல திரவம். அதனால் நம் உடல் எடைகுறைய உதவும். 

> மஞ்சள் டீ உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கும் தன்மை கொண்டிருப்பதால், வீக்கங்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகிறது. மேலும் இது உடலின் வளர்சிதை மாற்றங்களை அதிகரிக்க உதவுவதுடன் கொழுப்பை இயற்கையாகவும், விரைவாகவும் குறைக்க உதவுகிறது.

> இஞ்சி செரேடேனின் அளவை அதிகப்படுத்துவதால், செரேடேனின் பசியை தூண்டும் நரம்பு சமிஞ்சைகளுக்கு காரணமாகி பசியை கட்டுப்படுத்தி, பசியின்மை ஏற்படுத்தும். இதனால் குறைந்த அளவு உணவு உட்கொள்ள இஞ்சி உதவுகிறது.

> கல்லீரலின் எல்லா செல்களையும் பாதுகாத்து கல்லீரலை நன்றாக செயல்பட உதவுகிறது. மேலும் உங்களுக்கு பித்தபை கற்கள் பிரச்சனை இருந்தால் இந்த டீ நல்ல தீர்வாகிறது.

> இரைப்பை/ குடல் வலி நீக்கும் தன்மை இருப்பதால் வயிறு உப்புசம், அஜிரண கோளாறுகளுக்கு மருந்தாவதுடன், வாயு வெளியேற்றத்திற்கும் உதவுகிறது.

> இதில் விட்டமின் சி, நியாசின், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் தேவையான அளவு இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது இருமலுக்கும் சளிகோழைகட்டு பிரச்சனைக்கும் நல்ல தீர்வாகிறது.