சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை சொல்லும் சிறுநீர் நிறம்! சிறுநீரை அலட்சியப்படுத்தாதீங்க

Avoid kidney damage:  சிறுநீரக பிரச்சினைகள் தொடர்பான அறிகுறிகள் உடலின் பல பகுதிகளில் காணப்பட்டாலும், குறிப்பாக உங்கள் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களிலிருந்து நோயை நீங்கள் யூகிக்க முடியும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 25, 2023, 11:43 AM IST
  • சிறுநீரில் ஏற்படும் மாற்றங்கள்
  • சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் சிறுநீர்
  • சிறுநீரின் நிறத்தில் மாற்றம்
சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை சொல்லும் சிறுநீர் நிறம்! சிறுநீரை அலட்சியப்படுத்தாதீங்க title=

சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்ற உதவும் அத்தியாவசிய உறுப்பு ஆகும். இது உடலின் முழு செயல்பாட்டிலும் மிக முக்கியமான படிகளில் ஒன்றாகும். சிறுநீரகங்கள் சேதமடைந்தாலோ அல்லது சேதமடையத் தொடங்கினாலோ உடலின் இரத்தத்தை வடிகட்டும் செயல்முறைகள் மந்தமாகின்றன. இதனால் உடலில் கழிவுப் பொருட்கள் மற்றும் நச்சுகள் குவிவதற்கு தங்கி நாளடைவில் ஆரோக்கியம் சீர்கெடும். 

உடலின் கழிவான சிறுநீரில் ஏற்படும் மாற்றங்கள், சிறுநீரக பாதிப்பைக் குறிக்கும் அறிகுறியை காட்டிவிடும். ஆனால் அதை நாம் தான் கவனிப்பதில்லை. சிறுநீரக பாதிப்புகளை காட்டும் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்கள் முக்கியமானவை. சிறுநீரில் தோன்றும் சிறிய வித்தியாசத்தையும் அலட்சியப்படுத்தாதீர்கள். சிறுநீர் காட்டும் நோய்களின் அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்.

சிறுநீரக பிரச்சினைகள் தொடர்பான அறிகுறிகள் உடலின் பல பகுதிகளில் காணப்பட்டாலும், குறிப்பாக உங்கள் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களிலிருந்து நோயை நீங்கள் யூகிக்க முடியும்.

மேலும் படிக்க | கண்களை பாதிக்கும் ‘பயோடின்’ குறைபாடு... உணவில் சேர்க்கவேண்டியவை!

யூரின் நிறத்தில் மாற்றம்

உங்கள் சிறுநீரின் நிறத்தில் திடீரென்று ஏற்படும் மாற்றம் உங்கள் சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்று சொல்கிறது. பொதுவாக, சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறுநீரின் நிறம் வழக்கமான நிறத்தை விட அடர்த்தியாக அல்லது அதிக மஞ்சளாக இருக்கும். இது சிறுநீரக தொற்று அல்லது சிறுநீரக கற்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

சிவப்பு நிறத்தில் யூரின்

சிறுநீர் ரத்த நிறத்தில் சிவந்திருப்பதை நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.  சிறுநீரில் இரத்தத்துளிகள் கலந்திருக்கலாம். இது சிறுநீரகப் பாதிப்பைக் குறிக்கும் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால், சிறுநீரகங்கள் அல்லது சிறுநீர் பாதைக்குள் இரத்தப்போக்கு ஏற்படலாம், இது சிறுநீருடன் இரத்தம் வர வழிவகுக்கும்.

சிறுநீரின் துர்நாற்றம்

சிறுநீரில் துர்நாற்றம் இருந்தால், சிறுநீரகங்கள் சில நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதற்கான  அறிகுறியாக இருக்கலாம். இது சிறுநீரக பாதிப்பு அல்லது தொற்றுநோயைக் குறிக்கலாம், இது எளிதில் கவனிக்கக்கூடிய ஒன்று. ஆனால், இதை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. அதேபோல, சிறுநீர் வாசனையும் நபருக்கு நபர் மாறுபடும். எனவே, உங்கள் உடலைப் புரிந்துகொள்வதும், அதில் நடக்கும் வழக்கத்திற்கு மாறான விஷயங்களை உன்னிப்பாக கவனிப்பது அவசியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.  

மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை ஒழித்துக் கட்ட... வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய ‘சூப்பர்’ பானம்..!

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அது சரியாக வேலை செய்வதை நிறுத்தி, அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும். ஒரு நபர் தொடர்ந்து சில நாட்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகளை சந்தித்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை (Health Tips) பெற வேண்டும்.

நுரையுடன் கூடிய சிறுநீர்

உங்கள் சிறுநீரில் தோன்றும் சிறுநீரகப் பாதிப்பின் முதல் அறிகுறி, அமைப்புமுறையில் ஏற்படும் திடீர் மாற்றமாகும். சிறுநீர் நுரையாக வருவது, சிறுநீரில் புரதம் கலந்து வருவதை குரிக்கிறது. பொதுவாக சிறுநீரில் புரதம் இருக்காது, இந்த அறிகுறி ஏற்பட்டால் உங்கள் சிறுநீரகங்கள் கடுமையான ஆபத்தில் இருப்பதைக் குறிக்கலாம்.

சிறுநீரின் நிறத்தை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருங்கள். இது மிகப் பெரிய ஆபத்தை காட்டும் அறிகுறியாக இருக்கும். பொதுவாகவே, உடலில் எந்தவொரு மாற்றமும், பாதிப்பும் ஏற்படும்போது, அது ஏதேனும் ஒரு விதத்தில் அறிகுறிகளாக வெளியில் தெரியும். ஏனென்றால் எந்தவொரு மாற்றமும் ஒரு நாளில் நிகழ்ந்துவிடுவதில்லை.

(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வெங்காயத்தை எப்படி சாப்பிட்டாலும் நல்லதுதான்... ஆனா, இப்படி சாப்பிட்டா???

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News