நான் என்ன கறிவேப்பிலை கொத்த என்று நாம் அனைவரும் பயன்படுத்தி வரும் வார்த்தைகள், ஆனால் கறிவேப்பிலையில் உள்ள குணங்கள் பற்றி பார்ப்போம் :
கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துகள் உள்ளது.
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட்டால் நீரிழி நோய் அதாவது சக்கரை நோய் குணமடையும்.
பசியைத் நன்றாக தூண்டும் வேலையை கறிவேப்பிலை செய்யும்.
பார்வைக் கோளாறுகளுக்கு கறிவேப்பிலை நல்லது.
மலச்சிக்கலைத் தவிர்த்து விடும் கறிவேப்பிலை.
தலைமுடி நல்ல கறுப்பு நிறமாகவும் மற்றும் அடர்த்தியாக வளர உதவுகிறது.
கறிவேப்பிலை இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிர்தலை தடுக்கும்.
இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை உதவும்.
எனவே ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை பயன்படுத்தி நலன் பெறுவோம்.