யுனிசெஃப் உடன் இணைந்து மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக அழகி பட்டம் வென்ற மானுஷி சில்லர் மேற்கொண்டு வருகிறார்.
மாதவிடாய் விழிப்புணர்வு விஷயத்தில் இன்னும் மௌனமும் தவறான தகவல்களுமே அதிகமாக உள்ளன என்று கூறும் மானுஷி சில்லர், உலக மாதவிடாய் சுகாதார தினத்தன்று, சுகாதாரத்தை பராமரித்தல், போதுமான சுகாதார வசதிகளை உருவாக்குதல் மற்றும் பெண்களுக்கான சுகாதாரதயாரிப்புகளுக்கான விரைவான அணுகலை வழங்குவது தொடர்பான அனைத்து தகவல்களையும் சிறுமிகளுக்கு கற்பிப்பதற்கான தேவைகளை ஊக்குவிப்பது தொடர்பான பிரச்சாரங்களில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதவிடாய் சுழற்சியை சித்தரிக்க ஐ.நா-வால் ஏற்படுத்தப்பட்ட குறியான - ரெட் டாட் சேலஞ், அதாவது, சிவப்பு புள்ளி சவால் என்ற முன்முயற்சி நிகழ்வில் கலந்துகொண்ட மானுஷி, "மாதவிடாய் இன்னும் ஒரு கூச்சம் மிகுந்த, அச்சம் நிறைந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. நம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில் நாம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்" என்று கூறினார்.
READ | உலக அழகி பட்டம் வென்ற பெண்ணுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!
மாதவிடாய் சுகாதாரம் குறித்து, 'பிராஜெக்ட் சக்தி' என்ற தனது சொந்த செயல்திட்டத்தை நடத்திவரும் மானுஷி, ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது உடல் குறித்த துல்லியமான தகவல்களைப் பெற உரிமை உண்டு என்று கூறுகிறார்.
"ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும் தனது உடலைப் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெறுவதற்கான உரிமை உண்டு. சரியான தகவல்கள் இல்லாமல், பெண்களுக்கு தங்கள் மாதவிடாய் காலத்தைஎவ்வாறு பாதுகாப்பாக நிர்வகிப்பது என்பது தெரிவதில்லை. இன்னும் இது குறித்து மௌனமும் தவறான தகவலும் தான் உள்ளது. நாம் இதில் பல முன்னேற்றங்களைச் செய்துள்ளோம். இன்னும் பலவற்றை செய்ய வேண்டும்.
இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும். தவறான தகவல், தடைகள் ஆகியவற்றை அகற்றி இந்தமுக்கியமான பிரச்சினையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த புதிய முயற்சிக்குயுனிசெஃப் உடன் இணைந்திருப்பதில் பெருமைப்படுகிறேன்." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
READ | முகம்சுளிக்கும் படியான மானுஷி சில்லரின் கவர்ச்சி புகைப்படம்: See pic...
உலக அழகி பட்டம் வென்ற மானுஷி, சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக, வரவிருக்கும் ‘பிருத்விராஜ்’ என்ற படத்தில் அறிமுகவாகவுள்ளார்.
சந்திரபிரகாஷ் திவேதி இயக்கிய, "பிருத்விராஜ்" படம், மன்னர் பிருத்விராஜ் சவுகானின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இதில் அக்ஷய் பிருத்விராஜாகவும், மானுஷி அவரது காதலி சம்யுக்தாவாகவும் நடிக்கிறார்கள்.