உலக அழகி பட்டம் வென்ற பெண்ணுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

இறுதிச் சுற்றில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு, வெற்றி மகுடத்தை தட்டிச் சென்றார். 

Last Updated : Nov 19, 2017, 09:17 AM IST
உலக அழகி பட்டம் வென்ற பெண்ணுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

இந்த ஆண்டுக்கான 67-வது உலக அழகி போட்டி சீனாவில் உள்ள சான்யா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியின் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 5 பெண்கள் இறுதிச் சுற்றில் இடம் பெற்றிருந்தனர்.

அதில் இறுதிச் சுற்றில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு, வெற்றி மகுடத்தை தட்டிச் சென்றார். 

இந்நிலையில், உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லாருக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், வாழ்த்துக்கள் மனுஷி சில்லார். உங்கள் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது என பதிவிட்டுள்ளார்.

 

 

More Stories

Trending News