கொரோனோ வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள 10 எளிய வழிகள்: திவ்யா சத்யராஜ்

கொரோனோ வைரஸிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள கையாள வேண்டிய 10 வழிகளை ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.

Last Updated : Feb 3, 2020, 02:53 PM IST
கொரோனோ வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள 10 எளிய வழிகள்: திவ்யா சத்யராஜ் title=

கொரோனோ வைரஸிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள கையாள வேண்டிய 10 வழிகளை ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.

சீனாவின் ஹூபே மாகாணம், வுஹான் நகரில் உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் உருவானது. அந்த வைரஸ் சீனா மட்டுமின்றி 27 நாடுகளுக்கு வேகமாகப் பரவியுள்ளது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, 361 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளனர்.

கொரோனோ வைரஸ், இந்தியாவில் பரவாமல் தடுக்க, மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. சீனாவில் இருந்து கேரள மாநிலம் வந்த 2 பேருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் காற்றில் கலந்து அதிகமாகப் பரவுவதால், தங்களைப் பாதுகாக்க பலரும் முகக்கவசம் அணிந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது கொரோனோ வைரஸிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள கையாள வேண்டிய 10 வழிகளை ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.

1. இறைச்சிகளுக்கும், சமைத்த உணவுகளுக்கும் வெவ்வேறு வெவ்வேறு நறுக்கு பலகைகள் மற்றும் கத்திகளைப் பயன்படுத்துங்கள்.

2. சமைத்த உணவுகளையும், இறைச்சியையும்  கையாளும்போது கைகளை நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.

3. நன்கு சமைத்த உணவை மட்டுமே சாப்பிடுங்கள்.

4. ஒருமுறை பயன்படுத்தும் முகக்கவசங்களை பயன்பாட்டுக்குப் பிறகு உடனடியாக அப்புறப்படுத்திவிடவும். 

5. இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.

6. அழுக்கான ஆடைகள் மற்றும் காலணிகளை குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலக்கவும்.

7. நோய்வாய்ப்பட்ட விலங்குகள் மற்றும் கெட்டுப்போன இறைச்சியிலிருந்து விலகி இருங்கள்.

8. குறிப்பாக விலங்குகளையும், விலங்குகளின் பொருட்களையும் தொட்ட பிறகு அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவுங்கள்.

9. உங்களுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தால் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.

10. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி உணவுகளை அதிகம் உண்ணுங்கள்.

Trending News