புது டெல்லி, வைட்டமின்-டி குறைபாடு: கோவிட் தொற்று நோயாளிகளிடம், வைட்டமின் டி பற்றாக்குறை குறைபாடு ஒரு முக்கிய பங்கை ஆற்றுகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் தீவிர தன்மையானது நுரையீரலில் நிமோனியா பாதிப்பு அளவினால் தீர்மானிக்கப்படுகிறது. வைட்டமின் டி என்பது ஒரு செறிவான நோய் எதிர்ப்புத்திறன் ஊக்கியாக இருப்பதால், குறைவான அளவில் அது இருப்பது, நிமோனியா தாக்கம் உருவாவதை ஊக்குவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இருந்தால், கோவிட்-19 இலிருந்து தீவிரமாக நோய்வாய்ப்படும் வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கலாம் என்று இஸ்ரேலின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உடலில் வைட்டமின்-டி குறைபாடு இல்லை என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது?
மேலும் படிக்க | புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!
வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்
அடிக்கடி நோய்வாய்ப்படுதல்
வைட்டமின் டி இன் மிக முக்கியமான பாத்திரங்களில் ஒன்று உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருப்பது, இதனால் நீங்கள் நோயை ஏற்படுத்தும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட முடியும். இது தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்குப் பொறுப்பான உயிரணுக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறது. நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டால், குறிப்பாக சளி அல்லது காய்ச்சலினால், குறைந்த அளவு வைட்டமின் டி முக்கிய காரணமாக இருக்கலாம்.
சோர்வு மற்றும் பலவீனம்
சோர்வாக உணர பல காரணங்கள் இருக்கலாம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு அவற்றில் ஒன்று. உடலில் வைட்டமின் டி இன் மிகக் குறைந்த அளவு சோர்வை ஏற்படுத்தும், இது வாழ்க்கைத் தரத்தில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
எலும்பு மற்றும் முதுகு வலி
வைட்டமின்-டி பல வழிகளில் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இது உங்கள் உடலின் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. எலும்பு வலி மற்றும் கீழ் முதுகு வலி ஆகியவை இரத்தத்தில் வைட்டமின் டி போதுமான அளவு இல்லாததற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
மனச்சோர்வு
அடிக்கடி மனச்சோர்வடைந்திருப்பது வைட்டமின்-டி குறைபாட்டின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
எடை அதிகரிப்பு
உடல் பருமன் வைட்டமின் டி குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், இது போன்ற பல ஆராய்ச்சிகள் உள்ளன, இது வைட்டமின்-டி பற்றாக்குறையால், உடல் பருமன் அபாயமும் அதிகரிக்கும் என்று கூறுகிறது.
மேலும் படிக்க | ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR