புதுடெல்லி: ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், ஆரோக்கியம் மேம்படும் என்பது அனைவருக்கும் தெரியும். வயிற்று பசிக்கும், ருசிக்கும் ஆரோக்கியத்திற்கு மட்டுமா உணவு? மனநிலைக்கும் உணவுக்கும் இடையிலும் தொடர்பு உண்டு தெரியுமா?
ஒமேகா நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒமேகா -6 மற்றும் ஒமேகா -9 நிறைந்த உணவுகளும் மனநிலையை மகிழ்ச்சியாக மாற்றுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மனநிலையை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புபவர்களா நீங்கள்? புலம்பலிருந்து விடுதலை வேண்டுமா? இதை தவிர்க்காமல் சாப்பிடுங்கள், மட்டற்ற மகிழ்ச்சிக்கு நீங்கள் தான் சொந்தக்காரர்...
எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள், மகிழ்ச்சியாக இருப்பதுதான் நம் அனைவரின் விருப்பமும், ஏன் வாழ்வின் லட்சியமும் கூட. இருப்பினும், வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகள் மற்றும் சவால்கள் மகிழ்ச்சியை பாதிக்கின்றன.
ALSO READ | நார்ச்சத்தின் நன்மைகளும், தேவையும்
ஏதோ ஒரு காரணத்தால் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது, துக்கமும் சோகமும், வருத்தமும் ஏற்படுகின்றன. ஆனால், மகிழ்ச்சியான மனநிலை என்பது பிரச்சனையே இல்லாத சமயத்தில் கூட ஏற்படுவதை பார்த்திருக்கலாம்.
அதற்கு காரணம், மனதின் அழுத்தத்தைப் போக்கும், மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் (Nutritious Benefits) தன்மை கொண்ட சத்துக்கள் உணவில் இல்லாமல் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மனமகிழ்ச்சிக்கும் உணவுக்கும் தொடர்பான சில சிறப்பு விஷயங்கள், வாழ்வில் சுவையூட்ட மிகவும் உதவியாக இருக்கும். இதற்காக பிரத்தியேகமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ALSO READ | ராகியை நீங்கள் மிஸ் செய்தால் ஆரோக்கியம் உங்களுக்கு டாட்டா காட்டும்!
மனநிலையை உற்சாகப்படுத்த ஒமேகா உணவுகள்
ஒமேகா -6 மற்றும் ஒமேகா -9 கொழுப்பு அமிலங்கள் உங்கள் மனதையும் மனநிலையையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இதனுடன், அவை முடி, சருமத்தை ஆரோக்கியத்துடன் பராமரிக்கவும், பல நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.
அதேசமயம், ஒமேகா -6 மற்றும் ஒமேகா -9 கொழுப்பு அமிலங்கள் (Nutritious Benefits) உடலில் குறைந்துபோவதால், தூக்கமின்மை, மனச்சோர்வு, மன அழுத்தம், சோம்பல் சோர்வு, எலும்புகளில் பிரச்சனை என பலவித பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
ஒமேகா -6 மற்றும் 9 நிறைந்துள்ளது
எள், வால்நட், வேர்க்கடலை, சூரியகாந்தி, ஆலிவ் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்களில் ஒமேகா-6 மற்றும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது தவிர, பூசணி விதைகள் மற்றும் சோயாபீன்களில் ஒமேகா-6 மற்றும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்களும் உள்ளன.
ALSO READ | வெள்ளை அரிசி Vs பழுப்பு அரிசி: எது சிறந்த தேர்வு
முந்திரி-பாதாம் பிரியர்கள் இந்த இரண்டு பொருட்களிலிருந்தும் போதுமான ஒமேகா -9 ஐப் பெறுகிறார்கள். பச்சை காய்கறிகளிலும் ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதனுடன், உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் அவற்றை உட்கொள்வதன் மூலம் ஏராளமாக கிடைக்கின்றன.
அசைவ உணவு உண்பவர்களுக்கு மீனில் இருந்து ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3 அதிகம் கிடைக்கிறது. இது வைட்டமின் பி 12 மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் நல்ல மூலமாகும். சைவ உணவு உண்பவர்களிடம் வைட்டமின் பி12 குறைபாடு காணப்படுகிறது.
எனவே நீங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்பினால், இன்றிலிருந்தே இவற்றை உட்கொள்ளத் தொடங்குங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | ராகியை நீங்கள் மிஸ் செய்தால் ஆரோக்கியம் உங்களுக்கு டாட்டா காட்டும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR