புதுடெல்லி: குளிர், பனிகாலம் மூட்டுவலி நோயாளிகளுக்கு ஒரு கெட்ட காலம் என்று கூறலாம். ஏனெனில் குளிர் காலத்தில் உடல் உஷ்ணம் குறைவதாலும் நரம்புகள் பிடிப்பதாலும், தசை நார்கள் இறுக்கம் அடைவதாலும் மூட்டுகள் பாதிப்படைகின்றன.
மூட்டு வலி (Knee Pain) உள்ளவர்களுக்கு, எலும்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களுக்குக் குளிர்காலம் மிகவும் சிரமமானதாக அமைந்துவிடும். குளிர்காலத்தில் (Winter) மூட்டுகளில் வலி அதிகரிக்கும். மூட்டுகள் மடக்க இயலாமல் விறைத்ததுபோன்ற உணர்வு ஏற்படும்.
ALSO READ | உண்மையில் உடலுறவு மன அழுத்தத்தைக் குறைக்குமா? - நிபுணர் கூறுவது என்ன?
வெப்பநிலை குறையும்போது வலி அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. வெப்பநிலை (Temperature) குறையும்போது வளிமண்டல அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் நம் மூட்டுகளிலும் அழுத்தம் ஏற்படுகிறது. ஏற்கனவே மூட்டுகளில் குறைபாடு இருக்கும் நிலையில் காற்றின் அழுத்தம் அதிகரிக்கும்போது வலி அதிகமாகிறது.
மூட்டுவலியில் இருந்து குணமடைய எளிய தீர்வுகளை:-
* தினசரி மூட்டுகளுக்கும் கால் விரல்களுக்கும் பயிற்சி கொடுத்து வர மூட்டுவலி மறையும்.
* யோகாசனங்களை தொடர்ந்து செய்து வர மூட்டுவலி மறையும்
* தினசரி ஒரு வேளை இயற்கை உணவினை உண்டு வர யூரிக் அமிலம் குறையும் மூட்டுவலி மறையும்.
* குளிரால் மூட்டு வலி ஏற்பட்டால் அப்பகுதியில் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
* கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் எலும்பு வலிமை அடையும். குளிர் காலத்தில் மூட்டுக்கான பயிற்சிகளை செய்வதன் மூலம் வலி ஏற்படுவதை தடுக்கலாம்.
* குளிர் காலங்களில் அதிகாலை குளிரில் வெளியில் வருவதை தவிர்க்கவும். வெளியில் வர நேர்ந்தால் மப்ளர், சாக்ஸ், ஷூ பயன்படுத்தி கால்கள், கழுத்து பகுதி கதகதப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.
ALSO READ | Dry hair: குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு போய்விட்டதா? இதோ Tips
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR