Yoga Asanas : சில யோகா ஆசனங்கள், நமது நினைவாற்றலை அதிகரிக்க உதவும். அவை என்னென்ன ஆசனங்கள் தெரியுமா?

Yoga Asanas Tips For Better Concentration : ஒருவரை உடல் அளவிலும் மனதளவிலும் திடப்படுத்த உதவும் உடற்பயிற்சிகளுள் ஒன்று, யோகாசனம். பாலின பாகுபாடு, வயது பாகுபாடு அன்றி, அனைவருமே யோகாசனம் செய்யலாம். உடல் எடையை குறைப்பதற்கும், கட்டக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கும் யோகாசனம் உதவுகிறது. அது மட்டுமல்ல, மனச்சோர்வுகளை நீக்கவும், மகிழ்ச்சியாக வாழவும் கூட யோகாசனம் உதவும். யோகாசனங்களை நினைவாற்றலை வளர்த்துக்கொள்வதற்காகவும் செய்யலாம். அதற்கு உதவும் ஆசனங்கள் என்னென்ன தெரியுமா?
1.பத்மாசனா:
பத்மாசனா யோகாசனத்தை, ஆங்கிலத்தில் லோட்டஸ் போஸ் என கூறுவர். இது, செய்வதற்கு மிகவும் ஈசியான ஆசனம் ஆகும். இது, மாணவர்கள், படித்து கொண்டிருப்பவர்கள் என அனைவருக்கும் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள உதவும். இந்த யோகா, மனதை சாந்தப்படுத்தி தியான நிலைக்கு எடுத்து செல்லும்.
எப்படி செய்ய வேண்டும்?
தரையில் அமர்ந்து, கால்களை நீட்ட வேண்டும். ஒரு கால் மேல் ஒருகால் போட்டி குத்தங்கால் போஸில் அமர வேண்டும். பின்னர் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கைகளை இரு புறமும் நீட்டி மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும்.
2.ஹாலாசனா:
ஹாலாசனா ஆசனத்தால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது, மூளை நரம்புகளில் சாந்தப்படுத்தி பதற்றத்தை குறைக்கும். இதனால் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் இந்த ஆசனத்தை செய்யலாம். இதனால் நினைவாற்றல் அதிகரித்து நினைவு திறனும் சரியாக இயங்கும்.
எப்படி செய்வது?
>தரையில் நேராக படுக்கவும்
>இரு கால்களையும் நேராக உயர்த்தவும்
>உயர்த்திய கால்களை பின்புறமாக நீட்டவும்
>தரையில் படும் வரை அந்த காலை நீட்ட வேண்டும், அப்படியே சில நிமிடங்களுக்கு மூச்சை இழுத்து விடவும்.
3.பிராமரி ப்ராணாயாமம்:
இந்த ஆசனத்தை செய்யும் போது மூச்சு விடுவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இதனால் நினைவற்றல் அதிகரித்து சிந்தனைகளும் தெளிவாகும்.
எப்படி செய்வது?
>கால்களை சம்மணமிட்டு அமர்ந்து, இரு கை விரல்களால் காது கண்கள் மற்றும் வாய் பகுதியை மூடவும்.
4.விருக்ஷாசனா:
இந்த ஆசனத்தால் நினைவாற்றல் அதிகரிப்பதோடு மட்டுமன்றி, உடலின் பின்பகுதிக்கும் நன்மை பயக்கும். மன ரீதியாக தெளிவடைவதற்கு இந்த ஆசனத்தை செய்யலாம்.
எப்படி செய்வது?
>முதலில் நேராக நிற்க வேண்டும்
>இடது காலை வலது கால் தொடையில் வைக்கவும்
>இரு கைகள் கூப்பி சிறிது நேரம் நிற்கவும்
>அப்படியே கைகளை தலைக்கு மேல் உயர்த்தி மூச்சை இழுத்து விடவும்.
5.சூர்ய நமஸ்காரம்:
சூரிய நமஸ்கர் என்பது மிகவும் பிரபலமான யோகா பயிற்சிகளுள் ஒன்றாகும், இதில் மொத்தம் 12 யோகா போஸ்கள் உள்ளன. ஒவ்வொன்றை செய்யும் போதும் மூச்சை இழுத்து விட வேண்டும். இது, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கு, உடலில் பலத்தை அதிகரிப்பதற்கும், கவனச்சிதறல் ஏற்படாமல் இருப்பதற்கும் உதவுகிறது. இந்த ஆசனங்களை செய்கையில் சூர்ய ஒளியில் இருப்பது நல்லது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ