தேர்வு தோல்வி பயம்...தந்தையைக் கொலை செய்த 10-ம் வகுப்பு மாணவன்

மத்தியப் பிரதேச மாநிலம் குணா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில்  தனது தந்தையைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Chithira Rekha | Last Updated : Apr 7, 2022, 11:49 AM IST
  • 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி பயம்
  • தந்தையைக் கொலை செய்த சிறுவன்
  • பழியை அண்டை வீட்டு நபர் மீது சுமத்த முயற்சி
 தேர்வு தோல்வி பயம்...தந்தையைக் கொலை செய்த 10-ம் வகுப்பு மாணவன் title=

மத்தியப் பிரதேச மாநிலம் குணா பகுதியை சேர்ந்தவர் துளிசந்த் அஹிர்வார். இவருக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். கடந்த 3-ம் தேதி துளிசந்த் அகர்வால் தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து துளிசந்த் அகர்வாலின் மகனிடம் விசாரணை மேற்கொண்டபோது, தங்களது அண்டை வீட்டுக்காரரான வீரேந்திர அஹிர்வார் தந்தையின் அறையில் இருந்து சென்றதைப் பார்த்ததாக கூறியுள்ளார். 

மேலும் படிக்க | மதுபோதையில் தாயிடம் தகராறு - அண்ணனை தீர்த்துக்கட்டிய தம்பிகள்!

இதனைத் தொடர்ந்து வீரேந்திர அஹிர்வாரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் தடயவியல் சோதனையின் முடிவுகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய நிலையில், துளிசந்த் அஹிர்வாரின் மகனிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். முதலில் உண்மையை மறைத்த சிறுவன் பின்னர் உடைந்து அழுது எல்லா உண்மையையும் கூறியுள்ளார்.

10-ம் வகுப்புத் தேர்வை எழுதியுள்ள அச்சிறுவன் தேர்ச்சி அடையாவிட்டால் வீட்டை விட்டு துரத்தி விடுவதாக  துளிசந்த் அஹிர்வார் கூறியுள்ளார். தேர்வை ஒழுங்காக எழுதாத நிலையில், தோல்வி அடைந்து விட்டால் தந்தை அடிப்பாரோ என்று அச்சமடைந்த சிறுவன் அவரைக் கொலை செய்துள்ளார்.  துளிசந்த் குடும்பத்தினருக்கும், அவர்களது அண்டை வீட்டுக்காரரான வீரேந்திரர் குடும்பத்தினருக்கும் தகராறு இருந்த நிலையில் கொலைப்பழியை வீரேந்திரர் மீது போட திட்டமிட்டு காவல்துறையினரிடமும் அதையே கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அச்சிறுவன் சிறார் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க | அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக காவலர் மீது பெண் புகார்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News