பிரபல மருத்துவ கல்லூரி சேர்க்கை மோசடி வழக்கில் 2 கைது!

பிரபல மருத்துவ கல்லூரியில், இடம் வாங்கித்தருவாதாக கூறி அப்பாவி இளைஞர்களை ஏமற்றிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்!

PTI | Updated: Feb 14, 2018, 05:17 PM IST
பிரபல மருத்துவ கல்லூரி சேர்க்கை மோசடி வழக்கில் 2 கைது!
Representational Image

பெங்களூரு: பிரபல மருத்துவ கல்லூரியில், இடம் வாங்கித்தருவாதாக கூறி அப்பாவி இளைஞர்களை ஏமற்றிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்!

கர்நாட்டக மாநிலம் உடுப்பியில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரியான மனிப்பால் மருத்து கல்லூரியில் பயில்வதற்கு அனுமதி வாங்கி தருவதாக கூறி இளைஞர்கள் பலரிடம் பணம் கொள்ளை அடித்துள்ளனர். 

இச்சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களில் இருவர் ராஜந்த் செட்டி (பொறியியல் பட்டதாரி), ஜெய்பிரகார் சிங் (மேளான்மை பிரிவு மாணவர்) என அடையளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் சுமார் 31 வயது மதிப்பு தக்கவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இக்கும்பலை சேர்ந்த இதர 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இச்சம்பவத்தில் ஈடுபட்ட கும்பள் நகரின் முக்கிய இடத்தில், போலி அலுவலகத்தினை அமைத்து அதன் மூலம் இளைஞர்களை ஏமாற்றியுள்ளனர் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

இவர்களின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தலைமறைவாக உள்ள இருவரையும் தேடும் பணி நடைப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!