ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் இறுதி கட்ட மனித சோதனைக்கு இந்தியாவில் 5 இடங்கள் தயார்!

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசியின் இறுதி கட்ட மனித சோதனைகளுக்கு இந்தியாவில் 5 தளங்கள் தயாராக உள்ளன... 

Last Updated : Jul 28, 2020, 11:43 AM IST
ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் இறுதி கட்ட மனித சோதனைக்கு இந்தியாவில் 5 இடங்கள் தயார்! title=

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசியின் இறுதி கட்ட மனித சோதனைகளுக்கு இந்தியாவில் 5 தளங்கள் தயாராக உள்ளன... 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்து வருகிறது. நோய் பாதிப்பில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி வருக்கின்றனர். இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை (Covid vaccine) கண்டுபிடிக்கும் கட்டாயத்தில் பலநாடுகள் தங்களின் சோதனைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில், ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகா (Oxford-AstraZeneca) இணைந்து உருவாக்கி வரும் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் மற்றும் இறுதி கட்ட மனித சோதனைகளுக்காக நாடு முழுவதும் ஐந்து இடங்கள் தயாராக உள்ளதாக உயிரி தொழில்நுட்பத்துறை செயலாளர் ரேனு ஸ்வரூப் (Renu Swarup) தெரிவித்துள்ளார். 

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India), கொரோனா தடுப்பூசி தயாரானவுடன் அதை உற்பத்தி செய்ய ஆக்ஸ்போர்டு மற்றும் அதன் பங்குதாரரான அஸ்ட்ராஜெனெகா ஆகியோரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் இரண்டு கட்டங்களுக்கான சோதனை முடிவுகள் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. உயிரி தொழில்நுட்பத் துறை ஒவ்வொரு உற்பத்தியாளருடனும் நெருக்கமாக செயல்படுகிறது மற்றும் சீரம் நிறுவனத்தின் 3 ஆம் கட்ட சோதனை முக்கியமானது. 

ALSO READ | ஷாப்பிங் பிரியர்களுக்கு நற்செய்தி... இனி போலி தயாரிப்புகளை அடையாளம் காண்பது எளிது!

இது குறித்து அவர் கூறுகையில்.... "இந்தியாவில் எந்த ஒரு கொரோனா தடுப்பூசி முயற்சியின் ஒரு பகுதியாக உயிரி தொழில்நுட்பத் துறை உள்ளது. உயிரி தொழில்நுட்பத் துறை தற்போது மூன்றாவது கட்ட மருத்துவ தளங்களை அமைத்து வருகிறோம். நாங்கள் ஏற்கனவே அவற்றில் பணிபுரியத் தொடங்கிவிட்டோம். இப்போது, 3 ஆம் கட்ட சோதனைகளுக்கு ஐந்து இடங்கள் தயாராக உள்ளன, ”என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசியின் மனித மருத்துவ பரிசோதனைகளின் 2 மற்றும் 3 கட்டங்களை நடத்துவதற்கு புனேவை தளமாகக் கொண்ட SII இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதி கோரியுள்ளது. தடுப்பூசிக்கான அனைத்து அனுமதிகளும் பெற்றவுடன் கணிசமான அளவுகளுடன் தயாராக இருப்பதால், இறுதி ஒப்புதலுக்கு முன்பே தடுப்பூசியை உற்பத்தி செய்யத் தொடங்குவதாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

Trending News